மணப்பெண் கோலத்தில் ஆளை சொக்க வைக்கும் ஆண்ட்ரியா!

சென்னை : தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த நடிகையாக மட்டுமல்லாமல் துணிச்சலான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் சிறந்த நடிகை எனவும் பெயர் எடுத்து வருபவர் நடிகை ஆண்ட்ரியா

இப்பொழுது இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் உருவாகிவரும் பிசாசு இரண்டில் கதாநாயகியாக நடித்து வருகிறார்

இப்பொழுது மணப்பெண் கோலத்தில் பார்க்கும் அனைவரையும் சொக்க வைக்கும் அழகிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

போல்டான கதாபாத்திரங்களை

போல்டான கதாபாத்திரங்களை

பாடகியாக சினிமாவில் அறிமுகமாகி பின் நடிகையாக நடித்த திரைப்படங்கள் ஆண்ட்ரியாவுக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் இயக்குனர் ராம் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்த தரமணி திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்று தந்தது. முன்னணி நடிகைகள் பலரும் தயங்கும் போல்டான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வரும் ஆண்ட்ரியா தரமான கதைகளை தேர்ந்தெடுத்து தரமான நடிப்பை வெளிப்படுத்தி பல விருதுகளையும் வென்று வருகிறார்.

சந்திராவாக

சந்திராவாக

தமிழ் சினிமாவில் வெற்றி கூட்டணியாக வலம் வந்து கொண்டிருக்கும் வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் வெளியான வடசென்னை திரைப்படத்தில் சந்திராவாக ஆண்ட்ரியா மிரட்டியிருப்பார். வடசென்னையை மையமாக கொண்டு கேங்ஸ்டர் கதை களத்தில் வெளியான இந்த படத்தில் அமீர் ராஜன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதில் அவருக்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடித்து பரிமாணத்தை காட்டி பார்க்கும் அனைவரையும் மிரட்டி இருப்பார். மேலும் இந்த படத்தில் ராஜன் பொண்டாட்டி டா என ஆண்ட்ரியா சொல்லும் ஒவ்வொரு முறையும் ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.

பிசாசு 2

பிசாசு 2

வித்தியாசமான கதைகளை வித்தியாசமான மேக்கிங்கிள் இயக்கி வரும் மிஸ்கின் பிசாசு பாகம் 2 இயக்கி வருகிறார். பிசாசு பேய் படமாக இருந்தாலும் இதுவரை ரசிகர்கள் யாரும் பார்த்திராத வித்தியாசமான கதையாக பிசாசு வெளியாகி வெற்றி பெற்றது. இந்த நிலையில் பிசாசு பாகம் 2 இப்போது விறுவிறுப்பாக உருவாகி கொண்டு வருகிறது. இதில் ஆண்ட்ரியா லீட் ரோலில் நடிக்க விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பலமடங்கு உயர்ந்துள்ளது மேலும் நடிகை பூர்ணா, சந்தோஷ் பிரதாப், அஜ்மல் கான் என பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

மணப்பெண் கோலத்தில்

மணப்பெண் கோலத்தில்

இது ஒருபுறம் நடிப்பில் கலக்கிக் கொண்டு இருந்தாலும் மறுபுறம் மயங்க வைக்கும் குரலின் மூலம் ரசிகர்களை குஷிப்படுத்தி வரும் ஆண்ட்ரியா சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற பாடலை பாடி இருப்பார். அல்லு அர்ஜுனின் நடிப்பு சமந்தாவின் கவர்ச்சி நடனம் என அனைத்தையும் தாண்டிய ஆண்ட்ரியாவின் குரல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. எங்கே சென்றாலும் ஊர் சொல்றியா மாமா பாடல் இன்றுவரை ஒழித்துக் கொண்டுள்ளது. இவ்வாறு பாடகி, நடிகை என வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும் ஆண்ட்ரியா இப்பொழுது மணப்பெண் கோலத்தில் வித்தியாசமான உடையில் உள்ள புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அதில் சேலைக்கு மேலே மற்றுமொரு பிளேசர் போன்ற ஒரு காஸ்ட்யூம் அணிந்து கொண்டு நெத்திச்சுட்டி யுடன் பார்க்க மணப்பெண் கோலத்தில் உள்ள ஆண்ட்ரியாவின் இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X