அப்போ... அடுத்து கல்யாணமா?: காதலருடன் மீண்டும் நாயகியாக ஜோடி சேரும் ஆண்ட்ரியா!
சென்னை: ஆண்ட்ரியாவை காதலிப்பதாக கூறிய பாஹத் பாசிலுடன் மீண்டும் ஒரு படத்தில் ஜோடி சேர்கிறார் ஆண்ட்ரியா. விரைவில் திருமண அறிவிப்பு வெளியாகலாம் என்பது திரையுலகத் தகவல்..
அன்னாயும் ரசூலும் என்ற மலையாள படத்தில் ஜோடியாக நடித்த போது நடிகை ஆண்ட்ரியாவுக்கும், மலையாள நடிகர் பாஹத் பாசிலுக்கும் காதல் மலர்ந்தாக கிசு கிசு கிளப்பியது. இப்படம் கேரளாவில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. பின்னர் ஆண்ட்ரியாவை காதலிப்பதாக பாஹத் பாசில் பேட்டியும் அளித்தார். இந்நிலையில் மாண்டும் பாஹத்துடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஆண்ட்ரியா.

பச்சைக்கிளி அறிமுகம்...
தமிழில் கௌதம்மேனனின் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமாகி, ஆயிரத்தில் ஒருவனில் கார்த்தி ஜோடியாகி, இன்று விஸ்வரூபமாக தமிழ் ரசிகர்கள் மனதில் அவதாரம் எடுத்தவர் ஆண்ட்ரியா

பத்திக் கொள்ளும் பரபரப்பு...
தொடர்ந்து படங்களில் நடிக்காவிட்டாலும், இசையமைப்பாளர் அனிருத்துடன் முத்தமிடுவது போன்ற படங்கள் சமீபத்தில் வெளியான போட்டோக்களால் பரபரப்பை ஏற்படுத்தியவர் என்ற பெருமைக்குரியவர் ஆண்ட்ரியா.

காதல் பூ பூத்தது...
அன்னாயும் ரசூலும் என்ற மலையாள படத்தில் ஜோடியாக நடித்த போது மலையாள நடிகர் பாஹத் பாசிலோடு காதல் மலர்ந்ததாம். அதனை பாஹத்தும் பேட்டி ஒன்றில் ஒப்புக் கொண்டார்

அடுத்த படம்...
தற்போது இருவரையும் மீண்டும் ஜோடியாக வைத்து நார்த் 24 காதம் என்ற மலையாள படத்தை எடுக்க டைரக்டர் ராதா கிருஷ்ணமேனன் திட்டமிட்டுள்ளாராம்.

மீண்டும் ஜோடியாகிறார்கள்...
டைரக்டர் ஆண்ட்ரியாவிடமும் பாஹத் பாசிலிடமும் தனித்தனியாக பேசியதன் விளைவாக தற்போது இப்படத்தில் நடிக்க இருவருமே சம்மதித்து உள்ளனர். படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.

கன்பார்மா கல்யாணந்தான்...
மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளதால் இவர்களின் காதல் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாக மலையாள பட உலகில் கிசு கிசு பரவி உள்ளது. படப்பிடிப்பு முடிந்ததும் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் பேச்சு அடிபடுகிறது.
நடக்கட்டும்! நடக்கட்டும்!


Click it and Unblock the Notifications











