அங்காடித் தெரு சிந்து மரணம்..ஆதரவு இல்லாமல் நிர்கதியாக நிற்கும் மகள்!
சென்னை: அங்காடித்தெரு படத்தின் மூலம் பிரபலமான நடிகை சிந்து புற்றுநோயால் உயிரிழந்த நிலையில் அவரது மகள் ஆதரவு இல்லாமல் நிர்கதியாக நிற்கிறாள்.
வசந்த பாலன் இயக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான படம் அங்காடித்தெரு. இப்படத்தில் அஞ்சலி, மகேஷ், பழ கருப்பையாக ஆகியோர் நடித்திருந்தனர்.

இப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகை சிந்து. கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் வடிவேலுவிற்கு மனைவியாக நடித்திருந்தார். மேலும், சில தொலைகாட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.
மார்பகப் புற்றுநோய்: நடிகை சிந்துவிற்கு கடந்த 2020ஆம் ஆண்டு மார்பகப் புற்றுநோய் இருப்பது தெரியவந்ததை அடுத்து, நண்பர்கள் செய்த உதவியால் புற்றுநோய் பாதித்த மார்பகத்தை அறுவை சிகிச்சை செய்து அகற்றிவிட்டார். பின் உடல் சற்று தெறிவந்த சிந்துவிற்கு அடுத்து ஓர் பேரதிர்ச்சி காத்திருந்தது. காதல் திருமணம் செய்து கொண்டு நிம்மதியாக வாழ்ந்து வந்த தனது மகளின் கணவர் இறந்துவிட நிலைகுலைந்து போனார் சிந்து.
கணவனை இழந்த மகள்: மருமகன் மரணத்தால் 27வயதில் வாழ்க்கையை இழந்து தவிக்கும் மகளை நினைத்து கலங்கிய சிந்துவிற்கு கடவுள்கூட துணை நிற்கவில்லை என்று தான் சொல்லவேண்டும். அடுத்த மார்பகத்திற்கும் புற்றுநோய் பரவி விட மருத்துவ உதவிக்கு பணம் இல்லாமல் சிரமப்பட்ட சிந்துவிற்கு திரையுலகைச் சேர்ந்தவர்கள், நண்பர்கள் என உதவி செய்தனர்.
நிர்கதியான மகள்: இந்த நிலையில், கடந்த சில நாட்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிந்து நேற்று அதிகாலை 2.15 மணியளவில் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். சிந்துவின் மறைவால் அவரது மகள் பவித்ரா என்ன செய்வது என்று தெரியாமல் நிர்கதியாய் நிற்கிறாள். 27வயதில் கணவனை இழந்து ஒரு குழந்தையுடன் தாயே கதி என்று வந்தவள் இன்று தாயை பறிகொடுத்துவிட்டார். சிந்துவின் மரணத்தை விட பவித்ராவின் இந்தநிலை திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











