Anicka Vikhraman: மழையில் இப்படி எல்லாம் போஸ் கொடுத்தா எப்படி... பாய்ஸ் ரொம்ப பாவங்க!
சென்னை: நடிகை அனிகா விக்ரமன் மழையில் சொட்ட சொட்ட நனைந்து இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வாயடைத்துப் போனார்கள்.
கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த அனிகா விக்ரமன், பள்ளிப்படிப்பை சென்னையில் முடித்துவிட்டு கல்லூரி படிப்பை பெங்களூரில் தொடர்ந்தார்.

கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கும் போதே, இவருக்கு சினிமா மீது ஆர்வம் இருந்ததால், மாடலிங்கில் இறங்கினார். சில விளம்பரங்களில் நடித்து வந்த இவர், தமிழில் 'கே' என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார்.
நடிகை அனிகா விக்ரமன்: அதன்பிறகு, எங்க பாட்டன் சொத்து, விஷமக்காரன் ஆகிய படங்களில் நடித்த இவருக்கு பட வாய்ப்பு சரியாக அமையவில்லை. இதையடுத்து மலையாள படங்களில் நடிக்கத் தொடங்கினார். ஆனால், அங்கும் திறமையை நிரூபிக்கும் வகையில் கதைகள் அமையாததால் தொடர்ந்து நல்ல கதையை எதிர்பார்த்து காத்து இருக்கிறார்.

பாய்ஸ் ரொம்ப பாவம்: படவாய்ப்பு குறைந்தால் சோஷியல் மீடியாவில் அரைகுறை ஆடையுடன் இருக்கும் போட்டோக்களை பகிர்வதை பல நடிகைகள் வாடிக்கையாக வைத்து இருப்பதைப்போல நடிகை அனிகா விக்ரமனும் அவ்வப்போது, கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது, மழையில் சொட்ட சொட்ட நனைத்து இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, இளசுகளின் ஹார்ட் பீட்டை எகிற வைத்துள்ளார். இந்த போட்டோவை பார்த்த பேன்ஸ், மழையில் இப்படி எல்லாம் போஸ் கொடுத்த எப்படி என்றும், பாய்ஸ் ரொம்ப பாவம் என கமெண்ட்டுகளை அந்த புகைப்படத்திற்கு கீழே பகிர்ந்து வருகின்றனர்.

துன்புறுத்திய காதலன்: நடிகை அனிகா விக்ரமன், அண்மையில் தன்னுடைய முன்னாள் காதலன் தன்னை தாக்கியதாக நடிகை அனிகா விக்ரமன் அளித்திருக்கும் புகார் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, நடிகை அனிகா ஏற்படுத்தி தன்னுடைய முன்னாள் காதலர் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் தாக்கி துன்புறுத்தி இருப்பதாகவும், முகத்தில் ஏற்பட்ட காயங்களை புகைப்படங்களுடன் சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார். இந்த செய்தி சோஷியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் பேசுபொருளானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











