கொண்டையில் வாழைப் பூ.. உடம்பில் வாழை இலை.. வாழைத் தோட்டமாக மாறிய அஜித்தின் 'விஸ்வாசம்' மகள்!
சென்னை: நடிகை அனிகா சுரேந்திரன் ஆடைக்கு பதில் வாழையிலையை சுற்றிக்கொண்டு ஷேர் செய்திருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Recommended Video
மலையாள திரைத்துறையை சேர்ந்தவர் நடிகை அனிகா சுரேந்திரன். கத துடருன்னு என்ற மலையாள படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
தொடர்ந்து பல படங்களில் நடித்த அனிகா, தமிழில் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் அறிமுகமானார்.

குறும்படங்கள்
தொடர்ந்து நானும் ரவுடிதான், மிருதன், விஸ்வாசம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். குயின் வெப் சீரிஸிலும் முக்கிய ரோலில் நடிம்ததுள்ளார் அனிகா. தற்போது மாமனிதன் படத்தில் நடித்து வருகிறார். சில குறும்படங்களிலும் நடித்துள்ள அனிகா, பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

அசத்தல் போட்டோ ஷூட்ஸ்
சிறுமியாக இருந்த அனிகா கடகடவென வளர்ந்து விட்டார். சமீப காலமாக முன்னணி ஹிரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் கலக்கல் போட்டோ ஷூட்டுக்களை நடத்தி வருகிறார். அந்த வகையில் கலர் கலர் சேலையில் அவர் நடத்திய அசத்தல் போட்டோ ஷுட்ஸ் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த வயதில் இப்படியா?
அஜித்தின் மகளாக நடித்த குட்டிப் பெண்ணா இவர் என்று பிரமிக்கும் வகையில் இருந்தது அவருடைய போட்டோக்கள். அதே நேரத்தில் அனிகா, இந்த சின்னஞ்சிறு வயதில் இவ்வளவு கிளாமர் தேவையா என விமர்சனங்களும் எழுந்தது.

கலக்கும் போட்டோ
ஆனால் அதையெல்லாம் சட்டை செய்யாத அனிகா தொடர்ந்து தனது போட்டோ ஷுட்டுக்களை நடத்தி வருகிறார். மாடர்ன், ட்ரெடிஷ்னல் என இன்ஸ்டாகிராமை தெறிக்கவிட்டு வருகிறார் அனிகா. அந்த வகையில் அவர் தற்போது ஷேர் செய்திருக்கும் போட்டோ இணையத்தையே கலக்கி வருகிறது.

வாழை இலையை சுற்றிக்கொண்டு
அதாவது ஆடை ஏதும் அணியாமல் வாழை இலையை சுற்றிக்கொண்டு இருக்கிறார். சரியாக மார்பு வரை மட்டுமே உள்ளன அந்த வாழை இலைகள். வாழை இலைகள் நழுவி கீழே விழாதப்படி இடுப்பில் வாழை மட்டையை கட்டியுள்ளார் அனிகா.

தலையில் வாழைப் பூ
மேலும் தலையில் ஐந்து வாழைப்பூக்களை வைத்துள்ள அனிகா கையில் வாழை மட்டையுடன், ஒரு வாழைத் தோட்டத்தை போல போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் ஆடையில்லாமல் பார்ப்பது சற்று அதிர்ச்சியாகத்தான் உள்ளது என கமெண்ட் பதிவிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











