நான் ஒன்னும் சின்ன பாப்பா இல்ல..19 வயசாச்சு.. அனிகாவின் பிறந்தநாள் கிளிக்!
சென்னை: நடிகை அனிகா சுரேந்திரன் தனது 19வது பிறந்த நாளை கொண்டாடிய புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக அனிகா சுரேந்திரன் கௌதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் மகளாக நடித்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் விஸ்வாசம் படத்தில் அஜித்தின் மகளாக நடித்திருந்தார்.

இந்த படத்தில் அப்பா, மகள் செண்டிமென்ட் காட்சி பக்காவாக இருந்தது. பார்ப்பதற்கு ஒரு சாயலில் நயன்தாரா போல இருப்பதால் இவரை ரசிகர்கள் குட்டி நயன்தாரா என அழைத்து வருகின்றனர்.

நடிகை அனிகா சுரேந்திரன்: குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நுழைந்த அனிகா, நான் வளர்ந்து விட்டேன், பெரிய பெண்ணாகி விட்டேன் என்பதை பலமுறை கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு நாசூக்காக சொல்லிக் கொண்டிருந்தவருக்கு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து, புட்ட பொம்மா என்ற மலையாளப்படத்தில் நடித்தார்.

முத்தக்காட்சியில்: கப்பேலா என்ற தெலுங்கு படத்தின் ரீமேக்கான இப்படம் அனிகாவுக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. ஹீரோயினாக நடித்த முதல் படத்திலேயே அனிகாவுக்கு நல்ல பெயர் கிடைத்தது. இதையடுத்து, ஓ மை டார்லிங் என்ற மலையாள படத்தில் முத்தக்காட்சியிலும், படுக்கை அறை கவர்ச்சியிலும் நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. அடுத்து லவ்ஃபுலி யுவர்ஸ் வேதா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படமும் ஓரளவிற்கு விமர்சனத்தை பெற்றது.

19வயசு ஆச்சு: தற்போது அனிகா சுரேந்திரன் தன்னுடைய 19வது பிறந்த நாளை கொண்டாடிய புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தன்னுடைய அம்மாவை கட்டிப்பிடித்து கொண்டு கேக் ஊட்டி உள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், இனிமேல் யாரும், அனிகாவை சின்ன பாப்பானு சொல்லக்கூடாது, அவர் வளர்ந்துவிட்டார் என்று கருத்துக்களை பகிர்ந்து வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
கைவசம் உள்ள படம்: தற்போது, அனிகா ஹிப்ஹாப் தமிழாவின் PT சார், வாசுவின் கர்ப்பிணிகள், தனுஷ் இயக்கும் டி50 போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாக உள்ளது. இதன் பிறகு அனிகா தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











