அட.. நம்ம குட்டி நயனுக்கு இத்தனை லட்சம் ஃபாலோயர்ஸா.. கெத்துதான் போங்க!

சென்னை: குழந்தை நட்சத்திரமாக வலம் வரும் நடிகை அனிகா சுரேந்திரனை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை தொட்டுள்ளது.

மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா சுரேந்திரன். மலையாளம் மட்டுமின்றி தமிழிலும் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார்.

ஏராமான விருதுகளையும் குவித்துள்ளார் அனிகா சுரேந்திரன். இவர் என்னை அறிந்தால் மற்றும் விசுவாசம் ஆகிய படங்களில் நடிகர் அஜித்துக்கு மகளாக நடித்தார்.

நயன் ரசிகர்கள்

நயன் ரசிகர்கள்

இதேபோல் நானும் ரவுடிதான் படத்தில் சிறுவயது நயன்தாராவாக நடித்தார். அதேபோல் விசுவாசம் படத்தில் நயன்தாராவுக்கு மகளாக நடித்தார். இதனால் அஜித் ரசிகர்கள் அவரை அஜித்தின் ரீல் மகள் என்றும் நயன்தாராவின் ரசிகர்கள் அவரை குட்டி நயன்தாரா என்றும் அழைத்து வருகின்றனர்.

மளமளவென வளர்ந்து

மளமளவென வளர்ந்து

இதுவரை குழந்தை நட்சத்திரமாக இருந்த அனிகா தற்போது ஹீரோயின்களுடன் போட்டி போட தொடங்கி விட்டார். குழந்தையாக பால் வடியும் முகத்துடன் பார்த்த அவர், மளமளவென வளர்ந்து குமரிப் பெண்ணாக காட்சியளிக்கிறார்.

பெருமூச்சு விடும் ஃபேன்ஸ்

பெருமூச்சு விடும் ஃபேன்ஸ்

குட்டிப் பெண் அனிகாவா இப்படி குமரிப் பெண்ணாகிவிட்டார் என பார்க்கும் அனைவரும் பெருமூச்சு வீட்டு வருகின்றனர். அதற்கேற்றார் போலவே அவர் உடுத்தும் ஒவ்வொரு ஆடையும் உள்ளது. சேலை, பாவாடை தாவணி, ஸ்ட்ராப்லெஸ் கவுன் என ஹீரோயிகளுக்கு சமமாக போட்டோ ஷுட் நடத்தி வருகிறார்.

அத்தனை அம்சங்களும்

அத்தனை அம்சங்களும்

அவர் நடத்தும் போட்டோ ஷுட்டுக்களையெல்லாம் பார்க்கும் போது நிச்சயம் அவரது அடுத்தப்படமே ஹீரோயின் அறிமுக படமாக இருக்கும் என தோன்றுகிறது. அந்த அளவுக்கு ஹீரோயின்களுக்கான அத்தனை அம்சங்களையும் காட்டி கலக்கலாக போட்டோ ஷுட் நடத்தி வருகிறார்.

ஒரு மில்லியன்

ஒரு மில்லியன்

அவரது போட்டோக்களை பார்த்து ரசிப்பதற்கு என்றே அத்தனை ரசிகர்கள் அவரை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்ந்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகை அனிகாவை இன்ஸ்டாகிராமில் பின் தொடரும் ஃபாலோயர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை தொட்டுள்ளது.

ஏஞ்சல் போன்ற உடை

ஏஞ்சல் போன்ற உடை

இதனை படு குஷியாக தனது இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் அறிவித்துள்ளார் அனிகா. ஏஞ்சல் போன்ற உடையில் ஒரு கையில் நம்பர் ஒன்னும் மற்றொரு கையில் மில்லியனை குறிக்கும் வகையில் ஆங்கில எழுத்து எம்மையும் வைத்திருக்கிறார் அனிகா. சுற்றி பலுன்கள் பறக்க சிரித்து மகிழ்ந்திருக்கிறார்.

குடும்பம் பெரியதாகிவிட்டது

குடும்பம் பெரியதாகிவிட்டது

மேலும் அந்த போட்டோவுக்கு நம்பவே முடியவில்லை, இதயத்தின் ஆழத்தில் இருந்து உங்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்கிறேன்.. நம் குடும்பம் பெரியதாகிக் கொண்டிருக்கிறது என குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அனிகாவுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X