Anikha Surendran: மாலத்தீவில் அஜித்தின் ரீல் மகள்.. கொஞ்சம் ஓவரா தான் இருக்கு!
சென்னை: தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் அனிகா சுரேந்திரன்.
தற்போது மலையாளத்தில் இவர் நாயகியாக நடித்துள்ளார். ஓ மை டார்லிங் என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் அனிகாவின் லிப் லாக் காட்சி ரசிகர்களிடையே விமர்சனங்களை ஏற்படுத்தயது. சமூக வலைதளங்களிலும் அனிகா மிகவும் பிசியாக காணப்படுகிறார்.

அனிகா சுரேந்திரனின் மாலத்தீவு கொண்டாட்டம்: நடிகை அனிகா சுரேந்திரன் குழந்தை நட்சத்திரமாக தமிழ் மற்றும் மலையாள மொழிப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் அஜித்துடன் என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களிலும் ஜெயம் ரவியுடன் மிருதன் படத்திலும் குழந்தை நட்சத்திரமாக களமிறங்கி மிகச்சிறந்த விமர்சனங்களை பெற்றிருந்தார். இதில் கடந்த 2015ம் ஆண்டில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான என்னை அறிந்தால் படம் இவருக்கு சிறப்பாக அமைந்தது.
தற்போது நாயகியாக நடித்து வருகிறார் அனிகா சுரேந்திரன். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் இவர் நாயகியாக நடிக்க கதைகள் கேட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. மலையாளத்தில் ஓ மை டார்லிங் என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார் அனிகா. இந்தப் படத்தில் இவர் நெருக்கமான முத்தக்காட்சியில் நடித்திருந்தார். இந்தக் காட்சிகள் ரசிகர்களிடையே விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது. இந்த சிறிய வயதில் இதுபோன்ற அதிரடி காட்சியில் நடித்துள்ளது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்தப் படம் திரையரங்குகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரிலீசான நிலையில் தற்போது அமேசான் ப்ரைமில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் அனிகா. தொடர்ந்து கவர்ச்சிகரமான பல போட்டோஷுட்களை எடுத்து அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இவரது அடுத்தடுத்த கவர்ச்சிப் புகைப்படங்களால் கவரப்பட்டு இவரை இன்ஸ்டாகிராமில் 2.3 மில்லியன் பாலோயர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது மாலத்தீவில் விடுமுறைக் கொண்டாட்டத்தில் உள்ளார் அனிகா. தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தன்னுடைய ஆண் நண்பர்களுடனும் இணைந்து புகைப்படங்களை எடுத்து அதையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் தொடர்ந்து அங்கு கடற்கரை உள்ளிட்ட பல இடங்களில் புகைப்படங்களை எடுத்து இவர் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். இந்தப் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து ஏராளமான லைக்ஸ்களையும் பெற்று வருகிறது.
கடற்கரையில் மினி ஸ்கர்ட்டுடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு அனிகா வெளியிட்டிருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ லட்சக்கணக்கான லைக்ஸ்களை பெற்றிருந்தது. இந்நிலையில் தற்போது வலை போன்ற க்ராப் ஸ்லீவ்லெஸ் டாப்பில் அனிகா வெளியிட்டுள்ள புகைப்படங்களும் சில மணிநேரங்களிலேயே லட்சக்கணக்கான லைக்ஸ்களை பெற்றுள்ளது. இருக்க இருக்க இவரது கவர்ச்சி அதிகமாகி வருவதாகவும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











