Dhanush: டி50 சூட்டிங்கில் தனுஷ் போர்ஷன்கள் துவக்கம்.. படத்தில் இணைந்த அஜித்தின் ரீல் மகள்!
சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படம் வரும் டிசம்பர் 15ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் தனுஷ் டி50 படத்தின் சூட்டிங்கில் இணைந்துள்ளார். இந்தப் படத்தை தனுஷ் இயக்கி நடித்து வருகிறார்.
100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தில் எஸ்ஜே சூர்யா, அபர்ணா முரளி, சந்தீப் கிஷன் உள்ளிட்ட நடிகர்கள் இணைந்துள்ளனர்.

தனுஷின் டி50 படத்தில் இணைந்த அனிகா சுரேந்திரன்: நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து பர்ஸ்ட் லுக், டீசர் என அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகி மாஸ் காட்டியது. படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். படம் டிசம்பர் 15ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் தனுஷுடன் பிரியங்கா மோகன், ஜான் கொக்கன் உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்துள்ளனர்.
அருண் மாதேஸ்வரனின் ராக்கி, சாணிக் காயிதம் படங்கள் சிறப்பான வரவேற்பை பெற்ற நிலையில், அவரது கேப்டன் மில்லர் படம், தரமான சம்பவத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பீரியட் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தப் படத்தின் சூட்டிங்கை முடித்துள்ள நடிகர் தனுஷ், அடுத்ததாக தன்னுடைய இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகிவரும் டி50 படத்தில் இணைந்துள்ளார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துவருகிறது. படத்தின் பட்ஜெட் 100 கோடி என்று கூறப்பட்டுள்ளது. கேங்ஸ்டர் படமாக உருவாகிவரும் இந்தப் படம் மூன்று சகோதரர்களின் கதையை மையமாக கொண்டு உருவாகிவருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
படத்தில் எஸ்ஜே சூர்யா, விஷ்ணு விஷால், துஷாரா விஜயன், அபர்ணா முரளி, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோரும் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் மொட்டை அடித்து நேர்த்திக்கடனை செலுத்திய தனுஷ், தன்னுடைய தலையில் முடி வளர்வதற்காக காத்திருந்த நிலையில், தற்போது இந்த கெட்டப்பிற்கு தேவையான லேசான தலைமுடி வளர்ந்துள்ளதால், தற்போது அவரின் போர்ஷன்களும் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அஜித்துடன் என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் நடித்துள்ள அனிகா சுரேந்திரன், தற்போது டி50 படத்தில் கமிட்டாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தில் அவர் கேமியோ ரோலில்தான் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது இவர் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்நிலையில், தனுஷ் படத்திலும் இணைந்துள்ளார்.
வடசென்னையை மையமாக வைத்து டி50 படம் எடுக்கப்பட்டு வருகிறது. அதனால் படம் புதுப்பேட்டை படத்தின் இரண்டாவது பாகமாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. படத்தில் ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார். முன்னதாக தான் இல்லாத படத்தின் போர்ஷன்களை எடுத்து வந்தார் தனுஷ். இந்நிலையில், தன்னுடைய தலைமுடி வளர்ந்துள்ள நிலையில், தன்னுடைய போர்ஷன்களையும் எடுக்கத் துவங்கியுள்ளார். ப பாண்டி படத்திற்கு பிறகு இந்தப் படத்தை இயக்கி வருகிறார் தனுஷ்.


Click it and Unblock the Notifications











