பாவாடை தாவணியெல்லாம் போரடிச்சு போச்சு.. மாடர்ன் கெட்டப்புக்கு மாறிய குட்டி நயன்!
சென்னை: பாவாடை தாவணி, குயின் கெட்டப் என ட்ரெடிஷ்னல் லுக்கில் போட்டோ ஷுட் நடத்தி வந்த நடிகை அனிகா சுரேந்திர மீண்டும் மாடர்ன் கெட்டப்புக்கு மாறியிருக்கிறார்.
குழந்தை நட்சத்திரமாக கடந்த பத்தாண்டுகளாக ஏகப்பட்ட படங்களில் நடித்திருப்பவர் அனிகா சுரேந்திரன். மலையாளம் தமிழ் என இந்த வயதிலேயே கலக்கி வருகிறார்.
தற்போது குமரியாகிவிட்ட அனிகா, அதற்கேற்றார் போல் ஹீரோயின்களுக்கு போட்டியாக போட்டோ ஷுட் நடத்தி வருகிறார்.

சட்டென பார்த்தால்
வாரத்தில் குறைந்தது நான்கு போட்டோ ஷுட்டுக்களாவது நடத்தி விடுகிறார் அனிகா. அனிகாவை குட்டி நயன்தாரா என ரசிகர்கள் வர்ணித்ததை தொடர்ந்து நயன்தாரா போன்றே போட்டோ ஷுட் நடத்தி வருகிறார். சில போட்டோக்களில் சட்டென பார்த்தால் நயன்தாராவோ என்ற சந்தேகம் வரும் வகையில் உள்ளது அவரது போட்டோக்கள்.

சேலை, தாவணி
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சேலையில் விதவிதமாக போட்டோ ஷுட் நடத்தினார். அதனை தொடர்ந்து பாவாடை தாவணியில் அசத்தல் போட்டோ ஷுட்டை நடத்தினார் அனிகா. அந்த போட்டோக்கள் பெரும் வைரலானது.

வளைச்சு வளைச்சு
பின்னர் குயின் கெட்டப்பில் போட்டோ ஷுட் நடத்தினார் இந்த குட்டி நயன். டாப் ஆங்கிளில் அவர் வளைச்சு வளைச்சு நடத்திய போட்டோக்கள் லைக்ஸ்களை குவித்தன. அதனை பார்த்த ரசிகர்கள் வாவ் வாவ் என அவரது அழகை வர்ணித்தனர்.

மாடர்ன் லுக்
கடந்த சில நாட்களாய் ட்ரெடிஷ்னல் லுக்கில் போட்டோ ஷுட் நடத்தி வந்த நடிகை அனிகா சுரேந்திரனுக்கு அவையெல்லாம் போரடித்துவிட்டது போல. மீண்டும் பழையப்படி மாடர்ன் லுக்குக்கு மாறிவிட்டார். இதற்கான போட்டோ ஷுட் பணிகள் ஜரூராய் நடைபெற்று வருகிறார்.

பேண்ட் டீ ஷர்ட்
போட்டோ ஷுட் நடைபெறும் ஸ்பாட்டில் இருந்து அவர் எடுத்த போட்டோக்களையெல்லாம் தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில் ஆண்கள் சிலருடன் பேண்ட் டீஷர்ட் என ஃபிரி ஹேரில் உள்ளார் அனிகா.

மேக்கப் மேன்கள்
இதேபோல் லாங் கவுனில் முன்னணி நடிகைகளை போல போஸ் கொடுத்து கண்களாலேயே பேசியுள்ளார் அனிகா. கைகளை தூக்கியப்படி போஸ் கொடுத்த போட்டோக்கள் மற்றும் மேக்கப் மேன்கள் டிரெஸிங் செய்து விடும் சில பிஹைன்ட் தி போட்டோ, போட்டோக்களை ஷேர் செய்திருக்கிறார்.
Recommended Video

மீண்டும் ட்ரீட்
மேலும் புதிய போட்டோ ஷுட் பணிகள் நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் அப்போ சீக்கிரமே மேலும் ட்ரீட் இருக்கிறது என கமெண்ட் தெரிவித்துள்ளனர். விரைவில் இதற்கான முழு போட்டோக்களும் வெளியாகும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications