உச்சக்கட்ட அழகில் கிரிக்கெட் ஆடிய அனிகா சுரேந்திரன்.. அவுட்டானாலும் பயபுள்ள கெத்தா நிக்குதே!

சென்னை: நடிகை அனிகா சுரேந்திரன் அஜித்துடன் என்னை அறிந்தால் படம் மூலம் தமிழில் சிறுமியாக அறிமுகம் கொடுத்திருந்தார். இதையடுத்து அஜித்துடனேயே அடுத்ததாக விஸ்வாசம் படத்திலும் நடித்திருந்தார். இந்தப் படத்தில் நடிகை நயன்தாரா அஜித்திற்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தற்போது 19 வயதாகும் அனிகா சுரேந்திரன் நாயகியாக நடித்து வருகிறார்.மலையாளத்தில் ஓ மை டார்லிங் படத்தில் நடித்துள்ள இவர் கிளாமரான ரோலில் நடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார். இதையடுத்து தனுசுடன் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் லீட் கேரக்டரில் இணைந்து நடித்துள்ளார்.Instagram பக்கங்களிலும் இவர் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார்/

anikha surendran tamil cinema

நடிகை அனிகா சுரேந்திரன்: குழந்தை நட்சத்திரமாக அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து மாஸ் காட்டிய அனிகா சுரேந்திரன் தற்போது நாயகியாக நடித்து வருகிறார். 19 வயதான அனிகா அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் மலையாளத்தில் வெளியான ஓ மை டார்லிங் படத்தில் இவர் முத்தக் காட்சிகளிலும் படுக்கையறை காட்சிகளிலும் நடித்துள்ளார். இந்தப் படம் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இந்நிலையில் தற்போது நடிகர் தனுஷின் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் லீட் கேரக்டரில் இணைந்துள்ளார்.

தனுஷ் இயக்கத்தில் அனிகா: முற்றிலும் இளைஞர்களை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ள நிலையில் படம் இந்த ஆண்டு இறுதியிலேயே ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தை இயக்கி நடித்து தயாரித்தும் உள்ளார் தனுஷ். அனிகா சுரேந்திரன் அடுத்தடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் மிகவும் தாராளம் காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதன்மூலம் 2.6 மில்லியன் ரசிகர்கள் இவரை இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது அடுத்தடுத்த வீடியோக்களையும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்: அந்த வகையில் சமீபத்தில் இவர் ஓணம் கொண்டாட்டத்தையடுத்து ஓணம் புடவையில் வெளியிட்ட புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் கவனத்தை பெற்றன. அடுத்தடுத்த பேட்டிகள், வீடியோக்கள்மூலம் ரசிகர்களை சந்தித்து வருகிறார் அனிகா சுரேந்திரன். இதனிடையே, தற்போது அனிகா சுரேந்திரன் தன்னுடைய சூட்டிங் ஸ்பாட்டில் ஆடிய கிரிக்கெட் போட்டி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் புடவை அணிந்து கொண்டு இந்த கிரிக்கெட்டை அவர் ஆடியுள்ளார். பேட்டை தூக்கும் அளவிற்கு கூட அவருக்கு உயரம் போதவில்லை.

கிரிக்கெட் ஆடிய அனிகா: இருந்தபோதிலும் மனம் தளராமல் கிரிக்கெட்டை ஆடிய அனிகா சுரேந்திரன் ஒரு கட்டத்தில் அவுட் ஆகிறார். இருந்தபோதிலும் தன்னுடைய கான்ஃபிடன்சை சற்றும் குறைக்காமல் அடுத்த பாலுக்காக அவர் காத்திருப்பதாக இந்த வீடியோவில் காணப்படுகிறது. அனிகா சுரேந்திரன் ஆடிய இந்த கிரிக்கெட் போட்டியில் அவருடன் இணைந்துள்ள சக நடிகைகளும் மிகவும் க்யூட்டாக காணப்படுகின்றனர். மொத்தத்தில் இந்த அழகான கிரிக்கெட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X