'நடிகர் விஜய்யா இருக்குறது ஒன்னும் அவ்ளோ ஈஸி இல்ல' அந்த பாப்பாவா இப்படி பேசியிருக்காங்க!

சென்னை: நடிகர் விஜய்யா இருப்பது ஒன்றும் அவ்ளோ ஈஸி இல்லை என பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி குழந்தை நட்சத்திரமாக வலம் வருபவர் அனிகா சுரேந்திரன். மலையாள நடிகையான அனிகா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

தற்போது வளர்ந்து பெரிய பெண்ணாகிவிட்டார் அனிகா. ஹீரோயினுக்கான போட்டோ ஷூட்டுக்களை நடத்தி வருகிறார்.

விமானத்தில் போட்டோஸ்

விமானத்தில் போட்டோஸ்

அண்மையில் அமிதாப் பச்சனுடன் விளம்பர படம் ஒன்றில் நடித்தார் நடிகை அனிகா சுரேந்திரன். விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

விஜய்க்கு அறிவுரை

விஜய்க்கு அறிவுரை

அனிகா தமிழில் மிருதன், என்னை அறிந்தால், விஸ்வாசம், நானும் ரவுடிதான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் வரி விலக்கு விவகாரத்தில் நடிகர் விஜய்க்கு ஹைகோர்ட் அறிவுரை கூறியதை தொடர்ந்து விஜய்க்கு ஆதராக டிவிட்டியுள்ளார் அனிகா.

8 ஆண்டுகளுக்கு முன்பே

8 ஆண்டுகளுக்கு முன்பே

விஜய் 8 ஆண்டுகளுக்கு முன்பே இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி செலுத்திவிட்டதாக தெரிகிறது. இந்நிலையில் அவர் வரி விலக்கு கோரிய மனுவை விசாரித்த சென்னை ஹைகோர்ட் வரி செலுத்துவது கட்டாய பங்களிப்பு என சரமாரியாக அறிவுரை கூறியிருந்தது.

அவ்வளவு ஈஸி இல்லை

அவ்வளவு ஈஸி இல்லை

இதனால் விஜய் ரசிகர்கள் ஒரு பக்கம் அவருக்கு ஆதரவாகவும் ஹேட்டர்ஸ் அவருக்கு எதிராகவும் டிவிட்டி வந்தனர். இதனை பார்த்த நடிகை அனிகா நடிகர் விஜய்யாக இருப்பது ஒன்றும் அவ்வளவு ஈஸி இல்லை என பதிவிட்டுள்ளார்.

Recommended Video

என்னோட அம்மா சமையல்தான் என்னைக்கும் Best | Vijay Sethupathi pressmet | masterchef | Filmibeat Tamil
ஃபேக் ஐடியில் கருத்து

ஃபேக் ஐடியில் கருத்து

அவரது இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் விஜய்க்கு எதிராகவும் ஆதரவாகவும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். மேலும் இது அனிகாவின் ஒரிஜினல் ஐடி இல்லை, ஃபேக் ஐடியில் யாரோ கருத்து சொல்கிறார்கள் என்றும் விளாசி வருகிறார்கள் நெட்சடிசன்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X