கொரோனா லாக்டவுனில்.. அழகான ஆண் குழந்தைக்கு அம்மா ஆனார் பிரபல நடிகை.. ரசிகர்கள் வாழ்த்து!

By

சென்னை: பிரபல நடிகை ஒருவர் அழகான ஆண் குழந்தைக்கு அம்மாவாகி இருக்கிறார்.

குரு சோமசுந்தரம் நடித்த, வஞ்சகர் உலகம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனிஷா அம்புரோஸ்.

மனோஜ் பீதா இயக்கி இருந்த இந்த த்ரில்லர் படத்தில் விசாகன், புவன் சந்திரன் உள்பட பலர் நடித்திருந்தனர்.

கவனம் செலுத்தவில்லை

கவனம் செலுத்தவில்லை

இதையடுத்து தமிழ், தெலுங்கில் உருவான செவன் என்ற படத்தில் நடித்தார். இதில் ரகுமான், ரெஜினா காஸன்ட்ரா, நந்திதா ஸ்வேதா உள்பட பலர் நடித்தனர். நிஸார் ஷபி இயக்கி இருந்த இந்த படத்துக்குப் பிறகு தமிழில் கவனம் செலுத்தவில்லை. இவர், தெலுங்கில் கோபாலா கோபாலா, ரன், மனமந்தா, உன்னாதி சிந்தகி, ஏ நாகரனிகி எவைன்டி உள்பட உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

நடிகருடன் காதல்

நடிகருடன் காதல்

மலையாள, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இவர் தெலுங்கு நடிகர் ஒருவரைக் காதலிப்பதாகக் கூறப்பட்டு வந்தது. அதனை அவர் மறுத்து வந்தார். இந் நிலையில் அனிஷா அம்புரோஸுக்கும், குணா ஜக்கா என்பவருக்கும் திடீரென்று திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்த நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் ரகசியமாக நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

திருமணம்

திருமணம்

நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் உள்ளிட்ட திரையுலகினர் யாரும் அழைக்கப்படவில்லை. குணா, சினிமா துறையை சேர்ந்தவர் இல்லை. திருமணத்துக்குப் பிறகும் அனிஷா தொடர்ந்து நடிப்பார் என்று அப்போது அவர் தரப்பில் அப்போது தெரிவிக்கப்பட்டு இருந்தது. பின்னர் அவர்கள் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்கும் சினிமாவில் இருந்து யாரும் அழைப்படவில்லை.

ரசிகர்கள் வாழ்த்து

ரசிகர்கள் வாழ்த்து

நெருங்கிய சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நடிகை அனிஷாவுக்கு அழகான ஆண்குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை அவரது தோழியும் நடிகையுமான தேஜஸ்வி பகிர்ந்துள்ளார். இதையடுத்து அவருக்கு சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X