தொப்பியை தூக்கி போட்டு டிக்டாக்.. அட நல்லா இருக்கே.. நடிகையின் வித்தியாசமான வீடியோ !

மும்பை : சாமுராய் அனிதா வித்தியாசமான டிக்டாக் வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

Recommended Video

SOCIAL TRENDING VIDEOS | EP-02 | MAY-06 | MEDIA MAHADHI |FILMIBEAT TAMIL

இந்த ஊரடங்கு சமயத்தில் அனைத்து நடிகைகளும் சுறுசுறுப்பாகவும் , துறுதுறுப்பாகவும் இருந்து வருகின்றனர். குறிப்பாக சமையல் செய்வது, யோகா செய்வது, டிக் டாக் செய்வது , உடற்பயிற்சி செய்வது அதிகநேரம் சோசியல் நெட்வொர்க் மூழ்கி கிடப்பது போன்ற விஷயங்களில் ஈடுபடுவது வாடிக்கையாக உள்ளது.

Actress Anita Hassanandani shared a tiktok video

இப்படிப்பட்ட சூழ்நிலையில் யாருக்கு அதிகமாக ஃபாலோயர்ஸ் இருக்கிறார்கள் என்பது ஒரு தனி போட்டி தங்களுடைய இருப்பை காட்டிக் கொள்வதற்காக மிகவும் கிரியேடிவ் ஆன பல விஷயங்களை புதுப்புது ஐடியாவுடன் செய்து வருகின்றனர் .

அந்த வரிசையில் வருஷமெல்லாம் வசந்தம், சாமுராய் படத்தில் நடித்த அனிதா அதிகமான டிக்டாக் செய்துவருகிறார். தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கும் பல போட்டோக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அதுமட்டுமல்லாமல் மிகவும் எனர்ஜெடிக்காக சமூக வலைதளங்களில் பரபரப்பாக இருக்கிறார். இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

Actress Anita Hassanandani shared a tiktok video

இவர் தற்போது தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடிக்காவிட்டாலும் டிக் டாக் போன்ற குறுஞ்செயலி பயன்படுத்தி தன் ரசிகர்களை பொழுதுபோக்கு அம்சங்களுடன் ரசிக்கும்படியான பல காரியங்களை செய்து வருகின்றனர்.

Actress Anita Hassanandani shared a tiktok video

அனிதா செய்த டிக் டாக் மிகவும் வித்தியாசமாகவும், ஜாலியாகவும் பார்ப்பவர்கள் ரசிக்கும்படியாகவும் குறும்புத் தனமாக இருந்தது. தலையில் போடவேண்டிய தொப்பியை வாயில் வைத்துக்கொண்டு அதை அழகாக, லாவகமாக, இசைக்கு ஏற்றார் போல் தூக்கி வீசுகிறார். அந்த தொப்பி அப்படியே தலையில் மாட்டிக்கொள்கிறது. நெற்றியில் அவர் அணிந்திருக்கும் கண்ணாடி கீழே விழாமல் அந்தத் தொப்பியை அலேக்காக தலையில் மாற்றுவது ரசிக்கும்படி உள்ளது. இது பார்ப்பதற்கு வேடிக்கையாகவும், வித்தியாசமாகவும் இருக்கிறது.

Actress Anita Hassanandani shared a tiktok video

அனிதா தான் இருக்கும் இடத்தை எப்போதும் கலகலப்பாக வைத்து கொள்வார் என்பது இந்த வீடியோவை பார்க்கும் போதே தெரிகிறது. அனிதாவின் அன்றாட நடவடிக்கை தொடர்ந்து பலவிதமான நெட்டிசன்கள் அனிதா செய்யும் குறும்புத்தனமான செயல்களுக்கு வித்தியாசமான கமெண்ட்ஸ் கொடுத்து வருகின்றனர்.

Actress Anita Hassanandani shared a tiktok video

தினம் தினம் வித விதமான டிக் டாக்குகள் செய்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். இவர் செய்யும் வித்யாசமான வேலைகளுக்கு பல பாசிட்டிவ் கமெண்ட்ஸ் வந்த வண்ணம் இருக்கின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X