க்ரைம் ரேட் ஏறுதே.. அனிதா சம்பத் ரொம்ப ஆட்டியூட் காட்றாங்கப்பா.. வயசுக்கு மரியாதை கொடுக்க வேண்டாமா!
சென்னை: அனிதா சம்பத், நடிகர் சுரேஷ் சக்கவர்த்தியிடம் மரியாதை குறைவாக நடந்து கொள்வது பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
Recommended Video
பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர் அறிமுகத்தின் போது அவ்வளவு பாஸிட்டிவ் ரியாக்ஷன்களை பெற்றவர் அனிதா சம்பத்.
சமூக வலைதளங்களிலும் அவருக்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது. ஆனால் அடுத்தடுத்த நாட்களிலேயே அதனைக் கெடுத்துக் கொண்டார் அனிதா சம்பத்.

பெரும் பிரளயம்
குறிப்பாக சுரேஷ் சக்கரவர்த்தியிடம் அனிதா சம்பத் நடந்து கொள்ளும் விதம் பார்வையாளர்களை வெறுப்பேற்றி வருகிறது. அவர் சொல்லாத ஒரு வார்த்தையை சொன்னதாக கூறி பெரும் பிரளயத்தை கிளப்பினார்.

கிட்சனில் சமையல் வேலை
பின்னர் தானே தனது தவறை உணர்ந்து சுரேஷ் சார் நீங்க ஓகேவா? எனக்கு ஹேண்ட் ஷேக் பண்ணுங்க என்றார். இந்நிலையில் இன்று கிட்சனில் சமையல் வேலையில் ரேகாவும் சுரேஷ் சக்கரவர்த்தியும், ஆரி படிப்பதை கேட்டு கொண்டே செய்துக் கொண்டிருந்தனர்.

அமைதியா பேசும்மா
அப்போது அங்கு வந்து நொய் நொய்யென பேசிக்கொண்டிருந்தார் அனிதா சம்பத். அதனை பார்த்த சுரேஷ், அமைதியா பேசும்மா, அங்கு பேசுவதை கேட்டுக் கொண்டிருக்கிறோம் என்றார். ரேகா கூட அமைதியாக அரி பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தார்.

அனிதா ஆர்க்யூமென்ட்
ஆனால் எதையும் காதில் வாங்கமல் பேசிய அனிதா, யாருக்கும் யாரையும் பேசக்கூடாதுன்னு சொல்லமுடியாது என்று அப்போதே ஆர்க்யூமென்ட்டை தொடங்கிவிட்டார். மேலும் நான் ஏதாவது செய்து தருகிறேன் என்று கூறி அவரிடம் பேச ஆரம்பித்தார். ஆனால் சுரேஷ் பேச விரும்பவில்லை, நானே செய்து கொள்கிறேன் என்றார்.

ஆட்டியூட் - நக்கல்
ஆனாலும் விடவில்லை அனிதா சம்பத். அந்த நேரம் பார்த்து சனம் ஷெட்டி அங்கு வந்து ஏதையோ கேட்க, பேசாத அவருக்கு கேட்காதாம் என நக்கலாய் பேசி சிரித்தார் அனிதா. அவரது அந்த பிஹேவிங்கில் அப்படி ஒரு ஆட்டியூட் தெரிந்தது. மீண்டும் மீண்டும் அவரை இரிட்டேட் பண்ணுவதை போல் உங்கக்கிட்ட பேச மேடம்கிட்ட பேசுகிறேன் என்றார்.

முகம் சுளிக்க வைத்துள்ளது
சுரேஷ் பேசும் போதும் நக்கலாய் சிரித்தப்படியே இருந்தார் அனிதா. அனிதா சம்பத்தின் இந்த நடத்தை பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. வயசுக்கு கூட மரியாதை கொடுக்காமல் இப்படியா நடந்து கொள்வது என விளாசியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











