பொல்லாத உலகில் பயங்கர கேம்... இணைந்த மூன்று அழகிகள்

சென்னை: நடிகை ஐஸ்வர்யா தத்தா கதாநாயகியாக நடிக்கும் பப்ஜி திரைப்படத்தில் தற்போது புதிதாக மேலும் மூன்று நாயகிகள் இணைந்துள்ளனர். கேரளாவை சேர்ந்த அனித்ரா நாயர், பெங்களூரை சேர்ந்த நிவேதா பட்டுலா மற்றும் தமிழகத்தை சேர்ந்த சாந்தினி ஆகியோர் தான் அந்த மூன்று நடிகைகள். இப்படம் வெளியான பின்பு இவர்கள் மூவருக்கும் தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் சாருஹாசனை வைத்து தாதா 87 படத்தை டைரக்ட் செய்த இயக்குனர் விஜய். ஸ்ரீஜி யின் அடுத்த படமான பப்ஜி (பொல்லாத உலகில் பயங்கர கேம்) படத்தில் பிக் பாஸ் சீசன் 2 புகழ் ஐஸ்வர்யா தத்தா நாயகியாக நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. மிகுந்த பொருட்செலவில் காமெடி த்ரில்லராக இப்படம் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Actress Anithra Nair, Shantini and Niveda Baddula Joins in PUBG Movie

நடிகர் விக்ரமின் மருமகன் அர்ஜூமன், பிக் பாஸ் சீசன் 1 புகழ் ஜூலி, மொட்டை ராஜேந்திரன் ஆகியோரும் நடிக்கின்றனர் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. தற்போது படத்தில் நடிக்கும் மற்ற மூன்று நடிகைகள் யார் என்பதை படக்குழு அறிவித்துள்ளது.

Actress Anithra Nair, Shantini and Niveda Baddula Joins in PUBG Movie

கேரளாவை சேர்ந்த அனித்ரா நாயர், பெங்களூரை சேர்ந்த நிவேதா பட்டுலா மற்றும் தமிழகத்தை சேர்ந்த சாந்தினி ஆகியோர் பப்ஜி படத்தில் இணைந்துள்ளனர். இவர்களின் அழகைப் பார்த்து கோடம்பாக்கமே வாயடைத்துப்போய் உள்ளதாம். இந்தப் படம் வெளியான உடன், நிச்சயமாக இம்மூன்று நாயகிகளுக்கும் கோலிவுட்டில் பிரகாசமான எதிர்காலம் இருப்பதாகவும் படவாய்ப்புகள் குவியும் என்றும் சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

Actress Anithra Nair, Shantini and Niveda Baddula Joins in PUBG Movie

தற்போது மொபைல் ஃபோன்களில் விளையாடும் ஆபத்தான பப்ஜி விளையாட்டைப் போலவே, மரண பயத்தை ஏற்படுத்தும் அதிபயங்கர விளையாட்டை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அந்த விளையாட்டில் வெற்றி பெற்றவர்களுக்கு இறுதியில் ஒரு பரிசு காத்திருக்கிறது. முடிவில் என்ன நடக்கிறது என்பது தான் சஸ்பென்ஸ். இதனால் தான் இப்படத்திற்கு பப்ஜி (பொல்லாத உலகில் பயங்கர கேம்) என்று பெயரிட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Actress Anithra Nair, Shantini and Niveda Baddula Joins in PUBG Movie

More from Filmibeat

Read more about: cinema சாந்தினி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X