ஆசிட் வீசுவதாக சொன்னாரா? என்ன சொல்கிறார் அஞ்சலி அமீரின் காதலர்?
Recommended Video
திருவனந்தபுரம்: ஆசிட் வீசுவேன் என்று மிரட்டுவதாக, திருநங்கை அஞ்சலி அமீர் கூறியிருந்த புகாருக்கு அவரது காதலர் அனஸ் பதிலளித்துள்ளார்.
ராம் இயக்கத்தில், மம்மூட்டி, அஞ்சலி, சாதனா நடித்திருந்த படம், பேரன்பு. இதில் கேரளாவைச் சேர்ந்த திருநங்கை, அஞ்சலி அமீர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இவரது வாழ்க்கைக் கதை இப்போது சினிமாவாகிறது. டினோ ஜார்ஜ் இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் அடுத்த வருடம் மே மாதம் தொடங்குகிறது.

இந்நிலையில் அஞ்சலி அமீர், பேஸ்புக்கில் லைவில் நேற்று தோன்றி, பகீர் புகார் கூறியிருந்தார். அதில், தனது காதலர், தன் உணர்வுகளை மதிப்பதில்லை என்றும் என் நண்பர்களிடம் பேச கூட அனுமதிப்பதில்லை என்றும் மனரீதியாகவும் உடல் ரீதியாகபும் கடும் தொந்தரவு செய்வதாகவும் அவருடன் உறவை முறித்துக்கொள்ள முடிவு செய்ததால் ஆசிட் ஊற்றிக் கொன்றுவிடுவேன் மிரட்டுவதாகவும் கண்ணீருடன் கூறினார்.
தன் சேமிப்பில் இருந்து சுமார் 4லட்சம் ரூபாய் வரை அவர் பறித்துகொண்டதாகவும் புகார் கூறியிருந்தார். தனக்கு ஏற்பட்ட டார்ச்சர்களை தாங்க முடியவில்லை என்றும், தற்கொலை செய்யும் மனநிலையில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அவருக்கு ரசிகர்கள் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அஞ்சலி அமீரின் காதலர் அனஸ், மலையாள சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், நான் அவரை மிரட்டவில்லை என்று தெரிவித்துள்ளார். கடந்த 2 வருடமாக ஒன்றாக வாழ்ந்து வந்தோம். அவருக்கு யாரும் ஆதரவளிக்கவில்லை என்பதால் நான் உதவியாகத்தான் இருந்தேன். ஆனால், அவர் நண்பர்கள் அவருக்குத் தவறான ஆலோசனைச் சொல்கிறார்கள். அஞ்சலிக்கு விருப்பமில்லை என்றால் விலகிக்கொள்ளட்டும். எனக்கும் குடும்பம், வீடு இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











