ஸ்லிம்மா கெத்தா பிளாக் அண்ட் பிளாக்-ல் அதிரடி காட்டிய அஞ்சலி.. அசந்து போன ரசிகர்கள்!

சென்னை : துறுதுறுப்பான பேச்சு துள்ளலான நடிப்பு என தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து தனக்கென பெரும் ரசிகர் கூட்டத்துடன் வெற்றியுடன் வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அஞ்சலி.

கற்றது தமிழ், அங்காடித்தெரு உள்ளிட்ட திரைப்படங்களில் இவரது நடிப்பு மிக பிரபலமாக பேசப்பட்ட நிலையில் தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் இப்பொழுது தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகி வரும் நிசப்தம் என்ற திரைப்படத்தில் இதுவரை நடித்திராத வித்தியாசமான அதிரடி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

நிசப்தம் திரைப்படம் இன்னும் ஓரிரு வாரங்களிலேயே ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் நேரத்தில் அஞ்சலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்லிம்மா கெத்தா பிளாக் அண்ட் பிளாக்-ல் துப்பாக்கியுடன் செம ஸ்டைலாக போஸ் கொடுத்தவாறு வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று ரசிகர்கள் அனைவரையும் அசர வைத்த நிலையில் இப்பொழுது வைரலாகி வருகிறது.

முன்னணி நடிகர்களுடன்

முன்னணி நடிகர்களுடன்

கற்றது தமிழ், எங்கேயும் எப்போதும், அங்காடித் தெரு, பேரன்பு உள்ளிட்ட தரமான திரைப்படங்களில் நடித்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெற்றிக் நாயகியாக பல்வேறு வேடங்களில் நடித்து வரும் நடிகை அஞ்சலி பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து திரைப்படங்களில் கலக்கி வருகிறார்.

படப்பிடிப்புக்கள் மீண்டும் தொடங்கி

படப்பிடிப்புக்கள் மீண்டும் தொடங்கி

பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகிவரும் "வக்கீல் சாப்" திரைப்படத்தின் படப்பிடிப்பு கொரானா தொற்று காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் இப்பொழுது அதன் படப்பிடிப்புக்கள் மீண்டும் தொடங்கி அஞ்சலி படிப்பில் கலந்துகொண்டு மிக பிஸியாக நடித்து வருகிறார்.

"நிசப்தம்" என்கிற "சைலன்ஸ்"

சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான சிந்துபாத், நாடோடிகள் 2 உள்ளிட்ட திரைப்படங்களை தொடர்ந்து இப்பொழுது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒருசேர உருவாகி இருக்கும் "நிசப்தம்" என்கிற "சைலன்ஸ்" திரைப்படம் ஓரிரு வாரங்களிலேயே ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

"மகா" என்ற கதாபாத்திரத்தில்

இதுவரை பல்வேறு திரைப்படங்களில் பல கதாபாத்திரங்களை அஞ்சலி ஏற்று நடித்து இருந்தாலும் "நிசப்தம்" திரைப்படத்தில் முதன்முறையாக டிடக்டிவ் ஆபீஸராக ஆக்ஷனில் கலக்கி இருக்கும் இவரை பார்க்க ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். மாதவன், அனுஷ்கா செட்டி, ஷாலினி பாண்டே உள்ளிட்ட பிரபலமான நடிகர் நடிகைகள் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில் "மகா" என்ற கதாபாத்திரத்தில் அஞ்சலி நடித்திருக்க இப்பொழுது இவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் ஒன்று இணையதளத்தை தெறிக்கவிட்டுள்ளது.

Recommended Video

Actress cries like a child while taking covid19 test - Video
ஆகா ஓகோ

ஆகா ஓகோ

ஸ்லிம்மான லுக்கில் பிளாக் அண்ட் பிளாக் டிரஸ்ஸில் துப்பாக்கியுடன் செம கெத்தா போஸ் கொடுத்திருக்கும் அஞ்சலியின் இதுவரை கண்டிராத இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ஆகா ஓகோ என வர்ணித்து வரும் நிலையில் அக்டோபர் 2 வெளியாக இருக்கும் "நிசப்தம்" திரைப்படத்தின் வெளியீட்டை பலரும் காண ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X