"தேசிய விருது வாங்காம கல்யாணமா... நோ வே!" - சொல்றது யார் தெரியுமா?

By Vignesh Selvaraj

Recommended Video

தேசிய விருது வாங்காம சினிமாவை விட்டு போக மாட்டேன் - அஞ்சலி- வீடியோ

சென்னை : நடிகை அஞ்சலி, இப்போது திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இல்லை எனவும், தேசிய விருது வாங்காமல் எப்படி திரையுலகை விட்டு போகமுடியும் எனவும் கூறியிருக்கிறார்.

பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் தினசரி செய்தியாக இருந்த அஞ்சலி தற்போது சத்தம் இல்லாமல் கையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட அரை டஜன் படங்களோடு பிஸியாக இருக்கிறார்.

விரைவில் இவர் ஜெய் ஜோடியாக நடித்திருக்கும் 'பலூன்' திரைப்படம் வெளிவர உள்ளது. இந்தப் படத்தை சினிஷ் இயக்கியிருக்கிறார்.

நடிகை அஞ்சலி

நடிகை அஞ்சலி

ராம் இயக்கிய 'கற்றது தமிழ்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அஞ்சலி. முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர் வசந்தபாலன் இயக்கிய 'அங்காடித்தெரு' படத்தின் மூலம் சிறப்பாகப் பேசப்பட்டார்.

ரோசாப்பூ படத்தில் அஞ்சலி

ரோசாப்பூ படத்தில் அஞ்சலி

தற்போது வினு ஜோசப் இயக்கத்தில், பிஜு மேனன் நடிக்கும் 'ரோசாப்பூ' படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார் அஞ்சலி. இந்தப் படத்தில் அவர் பாலியல் தொழிலாளியாக நடித்திருப்பது தெரிய வந்துள்ளது.

மலையாளத்தில் அஞ்சலி

மலையாளத்தில் அஞ்சலி

மலையாளத்தில் அஞ்சலி நடித்து கடைசியாக வந்த படம் 2011-ல் வெளிவந்த 'பய்யன்ஸ்' திரைப்படம் தான். அந்தப் படம் சரியாகப் போகாததால் கண்டுகொள்ளப்படாமல் இருந்த அஞ்சலி இப்போது மலையாளத்தில் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

பலூன் படத்தில் அஞ்சலி

பலூன் படத்தில் அஞ்சலி

ராம் இயக்கத்தில் 'பேரன்பு' படத்தில் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார் அஞ்சலி. 'மெட்ரோ' இயக்குநர் சினிஷ் இயக்கத்தில் ஜெய் ஜோடியாக அஞ்சலி நடித்திருக்கும் 'பலூன்' படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்தப் படம் ஹாரர் த்ரில்லராக உருவாகி இருக்கிறது. இந்தப் படம் குறித்துப் பேசியுள்ளார் அஞ்சலி.

மீண்டும் ஜெய்யுடன்

மீண்டும் ஜெய்யுடன்

"மீண்டும் ஜெய்யுடன் நடித்திருக்கிறேன். ஒரு நல்ல ரோல். என்னிடம் வித்தியாசமான நடிப்பை வாங்கி இருக்கிறார் இயக்குநர். தற்போது உடல் எடை குறைத்து வருகிறேன். நல்ல படங்களாகத் தேர்வு செய்து நடித்து வருகிறேன்."

தேசிய விருது வேண்டும்

தேசிய விருது வேண்டும்

"எங்கு போனாலும் எப்போது திருமணம் என்று கேட்கின்றனர். அடுத்த வருடம் நடிக்க கையில் பல படங்கள் உள்ளன. அதனால் இப்போது திருமண எண்ணம் இல்லை. தேசிய விருது வாங்காமல் எப்படி சினிமாவை விட்டு போக முடியும்" என்று கேட்டிருக்கிறார் அஞ்சலி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X