சமந்தாவுக்கே டஃப் கொடுத்த அஞ்சலி… கவர்ச்சி உடையில் ஐட்டம் பாடலுக்கு டான்ஸ் !
சென்னை : நடிகை அஞ்சலி சமந்தாவுக்கே டஃப் கொடுக்கும் வகையில் கவர்ச்சி குத்தாட்டம் போட்டுள்ளார்.
அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடித்த புஷ்பா படத்தில் சமந்தா ஆடிய ஊ சொல்றியா மாமா பாடல் பட்டி தொட்டி எங்கு பிரபலமானது. அந்த பாடலுக்கு சமந்தா போட்ட ஸ்டெப், உடை என ஒன்னுவிடாமல் ரசிகர்கள் ரசித்து ரசித்து பார்த்து வருகின்றனர்.
அந்த பாடலின் வெற்றியைத் தொடர்ந்து பல முன்னணி நடிகைகளும் ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட முன்வந்துள்ளனர். தற்போது அஞ்சலி ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ள புகைப்படம் வெளியாகி அனைவரையும் வாய்பிளக்க வைத்துள்ளது.

அறிமுகம்
ஜீவா நடித்த கற்றதுதமிழ் என்ற திரைப்படத்தில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து நல்ல நடிகை என பெயர் எடுத்தார் அஞ்சலி. மாநிறமாக இருக்கும் அஞ்சலி பக்கத்து வீட்டுபெண்போல இயல்பாக இருந்ததால் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது. இதையடுத்து, அங்காடித் தெரு, தூங்கா நகரம், மங்காத்தா, எங்கேயும் எப்போதும், கலகலப்பு என பல வெற்றிப்படங்களில் நடித்தார்.

பக்கா கெமிஸ்டிரி
எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் ஜெய்யுடன் இணைந்து நடித்திருந்தார் அஞ்சலி. அந்த படத்தில் இருவரின் கெமிஸ்டிரி பக்காவாக இருந்தது. இதையடுத்து, இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், இது குறித்து இருவரும் எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்கவில்லை. மேலும், தமிழில் வாய்ப்பு குறைத்தால் தெலுங்கிற்கு சென்று ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

கவர்ச்சியில் களமிறங்கிய அஞ்சலி
தமிழில் அதிகம் கவர்ச்சி காட்டாத அஞ்சலி படவாய்ப்பு குறைந்ததால், கவர்ச்சிக்கு மாறினார். நான்கு இயக்குநர்களின் இயக்கத்தில் உருவான பாவக்கதைகள் அந்தாலஜியில் விக்னேஷ் சிவன் இயக்கிய ‘லவ் பண்ணா உட்றனும்‘ என்ற பகுதியில், லெஸ்பியனாக உச்சக்கட்ட கவர்ச்சியில் நடித்து அனைவரையும் அலற விட்டார். தற்போது, ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் RC15 திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.
Recommended Video

ஐட்டம் பாடலுக்கு
அஞ்சலி தற்போது தெலுங்கு படம் ஒன்றில் இடம் பெறும் ஐட்டம் சாங்கிற்கு கவர்ச்சி நடனம் ஆடி உள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் நிதின் நடிப்பில் உருவாகி வரும் ‘மச்சேர்லா நியோஜகவர்கம்' என்கிற படத்தில் தான் நடிகை அஞ்சலி கவர்ச்சி நடனம் ஆடி உள்ளார். இதற்கான போஸ்டர் ஒன்றும் வெளியாகி உள்ளது. அதில் புஷ்பா படத்தில் நடிகை சமந்தா அணிந்திருந்தது போல் படுகவர்ச்சியான உடை அணிந்தபடி போஸ் கொடுத்துள்ளார் அஞ்சலி. இந்த பாடல் ரிலீசான பின்னராவது நடிகை அஞ்சலிக்கு பட வாய்ப்பு வருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











