ஷங்கர் படத்தின் சூட்டிங்கில் ஜாய்ன் ஆன பிரபல நடிகை... என்ன சொல்லியிருக்காங்க பாருங்க!

சென்னை : இயக்குர் ஷங்கர் தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.

Recommended Video

Kanmani quits Bharathi Kannamma! |Anjali Bharathi Kannamma, Tamil serial

தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என பான் இந்தியா படமாக இந்தப் படம் உருவாகி வருகிறது.

இந்நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங்கில் தற்போது இணைந்துள்ளதாக பிரபல நடிகை தனது ட்விட்டர் பக்கத்தில் அப்டேட் தெரிவித்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் ஆர்சி15 படம்

ஷங்கர் இயக்கத்தில் ஆர்சி15 படம்

தெலுங்கில் நடிகர் ராம்சரணின் படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் ஷங்கர். மிகுந்த பிரம்மாண்டமான அளவில் இந்தப் படம் தயாராகி வருகிறது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்திற்கு தற்காலிகமாக ஆர்சி15 என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் சூட்டிங் மிகவும் விறுவிறுப்பாக தற்போது நடைபெற்று வருகிறது.

ராம்சரணுடன் இணைந்த ஷங்கர்

ராம்சரணுடன் இணைந்த ஷங்கர்

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதையடுத்து ராம்சரணின் இந்தப் படத்தில் டைரக்டர் ஷங்கர் இணைந்துள்ளார். படத்தில் கியாரா அத்வானி, ஜெயராம், ரகுமான் உள்ளிட்டவர்கள் இணைந்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு புனேவில் துவங்கி பல இடங்களில் நடைபெற்று வருகிறது.

முக்கிய கேரக்டரில் அஞ்சலி

முக்கிய கேரக்டரில் அஞ்சலி

இந்தப் படத்தில் நடிகை அஞ்சலியும் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார். படத்தின் தொடக்கவிழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட போஸ்டரில் ஷங்கர், ராம்சரண், ரகுமான் உள்ளிட்டவர்களுடன் அஞ்சலியையும் பார்க்க முடிந்தது. தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் என பான் இந்தியா படமாக ஆர்சி15 உருவாகி வருகிறது.

படப்பிடிப்பில் அஞ்சலி

படப்பிடிப்பில் அஞ்சலி

இந்நிலையில் ஆர்சி15 படப்பிடிப்பில் தான் கலந்து கொண்டுள்ளதாக நடிகை அஞ்சலி தனது ட்விட்டர் பக்கத்தில் அப்டேட் தெரிவித்துள்ளார். தன்னுடைய கலக்கலான புகைப்படங்களுடன் அவர் இந்த தகவலையும் பகிர்ந்துள்ளார். காரில் இருந்தபடி இந்த புகைப்படங்களை எடுத்து அவர் பதிவிட்டுள்ளார். மேலும் சூட்டிங்கிற்கு சென்று கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். விடுமுறை தேவைப்படாத வேலையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

பிரம்மாண்ட தயாரிப்பு

பிரம்மாண்ட தயாரிப்பு

ஆர்சி15 படத்தை தில் ராஜு பிரம்மாண்டமான வகையில் தயாரித்து வருகிறார். படத்தின் பட்ஜெட் 170 கோடி ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் கதையை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் எழுதியுள்ள நிலையில், இசையமைப்பாளர் தமன் முதல் முறையாக ஷங்கருடன் இந்தப் படத்தின்மூலம் இணைந்துள்ளார். திரு ஒளிப்பதிவு செய்து வருகிறார். வலிமையான கூட்டணியுடன் இந்தப் படம் உருவாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X