Don't Miss!
- News வின்னர் யாரு? ரிப்போர்ட் அனுப்புங்க.. வாக்குச்சாவடி ரீதியாக திமுக, அதிமுக திக் சர்வே! எகிறிய பதற்றம்
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
காருக்குள் முண்டா பணியனுடன் க்ளிக்கிய அஞ்சலி.. இவ்ளோ அழகா இருந்தா நாங்க தாங்க மாட்டோம்!
சென்னை : பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் தெலுங்கில் பிரம்மாண்டமாக வெளியான வக்கீல் சாப் படத்தில் மூன்று ஹீரோயின்களில் ஒருவராக அஞ்சலி நடித்து இருந்தார்.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் ஆனந்த பைரவி படத்தில் ராய் லட்சுமி, அதித் அருண் உடன் இணைந்து நடித்து வருகிறார்.
பேரன்புக்கு பிறகு மீண்டும் மம்முட்டியுடன் இணைந்து பீஷ்ம பருவம் என்ற மலையாள படத்தில் நடித்து வரும் இவர் இப்பொழுது கவருக்குள் முண்டா பணியனுடன் எடுத்த செம க்யூட்டான செல்பி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை உருக வைத்துள்ளார்.
எல்லாருக்கும் ஆதார் என்பது அட்ரஸ் எனக்கு அது வாழ்க்கை.. அதர்வா நடிப்பில் தெறிக்கும் அட்ரஸ் டீசர்!
பிரம்மாண்டமாக வெளியான
இந்தி, தமிழைத் தொடர்ந்து பிங்க் திரைப்படம் தெலுங்கில் வக்கீல் சாப் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் பவன் கல்யாண் ஹீரோவாக நடித்திருந்தார். மூன்று கதாநாயகிகளில் ஒருவராக அஞ்சலி நடித்து பாராட்டுக்களை பெற்றிருந்தார். பெரும் எதிர்பார்ப்புக்கு பிறகு மிகப் பிரம்மாண்டமாக வெளியான வக்கீல் சாப் வசூலை வாரிக் குவித்து பாக்ஸ் ஆபீசை தெரிக்கவிட்டது.
முதல்முறையாக இரட்டை
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பாவக் கதைகள் ஆந்தாலஜி திரைப்படத்தில் லவ் பண்ணணா உட்ரனும் என்ற பகுதியில் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடித்து கலக்கி இருந்தார். இரட்டை வேடத்தில் நடித்ததற்கு பாராட்டுகள் குவிந்தாலும் மறுபுறம் படுகவர்ச்சியாக சர்ச்சைக்குரிய சில காட்சிகளில் நடித்திருந்தது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது.
ஆனந்த பைரவி
கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகள் வெளியாவது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்க அஞ்சலியும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் ஆனந்த பைரவி என்ற படத்தில் நடிக்கிறார். இதில் அஞ்சலியுடன் உடன் ராய் லட்சுமி மற்றும் அதித் அருண் நடிக்கின்றனர்.
சர்வதேச அளவில்
கற்றது தமிழுக்கு பிறகு இயக்குனர் ராம் இயக்கத்தில் மம்முட்டியுடன் இணைந்து நடித்திருந்த பேரன்பு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது சர்வதேச அளவில் பல விருதுகளையும் குவித்தது. பேரன்பைத் தொடர்ந்து மீண்டும் மம்முட்டியுடன் அஞ்சலி இணைந்து நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
நாங்க தாங்க மாட்டோம்
அதன்படி மலையாளத்தில் பீஷ்ம பருவம் என்ற படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார். இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் செம ஆக்டிவாக இருக்கும் அஞ்சலி இப்பொழுது காருக்குள் முண்டா பணியனுடன் ஹேர் கிளிப் ஒன்றை போட்டுக் கொண்டு மேக்கப் இல்லாமல் எடுத்த செம க்யூட்டான புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் இவ்வளவு அழகா இருந்தா நாங்க தாங்க மாட்டோம் அஞ்சலி என உருகி பதிவிட்டு வருகின்றனர்.