Anjali : அஞ்சலியின் 50வது படம் ஈகை…மிரட்டலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் !

சென்னை : நடிகை அஞ்சலி சினிமாவில் எண்ட்ரியாகி 17 ஆண்டுகளாகி உள்ள நிலையில், 50வது படத்தின் தலைப்பு இன்று வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை அஞ்சலி, இவரின் எதார்த்தமான பேச்சும், அழகும் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்துப்போனதால் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு.

இவர் கற்றது தமிழ்,அங்காடித் தெரு, கலகலப்பு, இறைவி போன்ற ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

actress Anjalis 50th Film 𝗘𝗲𝗴𝗮𝗶 First Look Poster

நடிகை அஞ்சலி :

கற்றது தமிழ் என்ற படத்தில் நடித்த அஞ்சலிக்கு அப்படம் நல்ல ஒரு தொடக்கமாகவே இருந்தது. அந்த படத்தைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்து வந்த அஞ்சலி, அங்காடி தெரு என்ற திரைப்படத்தில் கனி என்ற கதாபாத்திரத்தில் இயல்பாக நடித்திருந்தார். இந்த படம் ஹிட்டடித்து அஞ்சலிக்கு சினிமாவில் நல்ல ஒரு தொடக்கத்தை கொடுத்தது. மேலும், அஜித்தின் மங்காத்தா, சூர்யாவின் சிங்கம் 2 என டாப் நடிகர்களின் படங்களிலும் நடித்திருந்தார்.

காதல் கிசுகிசு :

அதன் பின் சரவணன் இயக்கத்தில் உருவான எங்கேயும் எப்போதும் படத்தில் ஜெய்யுடன் இணைந்து நடித்த போது இருவரும் காதலிக்கத் தொடங்கினர். அந்த படத்தில் இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி பக்காவாக இருந்ததே இவர்களின் காதலை உறுதிச்செய்தது. அதன்பின் இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்ததாகவும், லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகவும் சொல்லப்பட்டது.

actress Anjalis 50th Film 𝗘𝗲𝗴𝗮𝗶 First Look Poster

வெப் தொடர்களில் :

இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என கிசுகிசுக்கப்பட்டது. பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இருவரும் பிரிந்தனர். இதையடுத்து தெலுங்கு திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமா பக்கமே தலைகாட்டாமல் இருந்த அஞ்சாலி ஜான்சி, பாஃல் போன்ற வெப்தொடர்களில் நடித்து பெயர் எடுத்தார்.

50வது படம் :

இந்த நிலையில், நடிகை அஞ்சலி சினிமாவில் என்ட்ரி கொடுத்து 17 வருடங்கள் ஆகியுள்ள நிலையில், தற்போது அவர் தனது 50வது படத்தில் கமிட்டாகி உள்ளார். இப்படத்தை க்ரீன் அமியூஸ்மெண்ட் மற்றும் டி3 புரடொக்சன்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது. அந்த போஸ்டரில் அஞ்சலி குடைகளுக்கு நடுவே கோவமாக பார்க்கிறார். மேலும், இப்படத்திற்கு ஈகை என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X