யார் நண்பர்..யார் எதிரி.. நினைவை இழந்த பெண்ணாக நடிகை அஞ்சலி.. ஃபால் புதிய வெப் தொடர்!

சென்னை : நடிகை அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள தொடர் 'ஃபால்'என்ற வெப் தொடரின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

ஜீவா நடித்த கற்றது தமிழ் என்ற திரைப்படத்தில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து நல்ல நடிகை என பெயர் எடுத்தவர் நடிகை அஞ்சலி.

மாநிறமாக இருக்கும் அஞ்சலி பக்கத்து வீட்டுபெண்போல இயல்பாக இருந்ததால் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது. இதையடுத்து, அங்காடித் தெரு, தூங்கா நகரம், மங்காத்தா, எங்கேயும் எப்போதும், கலகலப்பு என பல வெற்றிப்படங்களில் நடித்தார்.

நடிகை அஞ்சலி

நடிகை அஞ்சலி

எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் ஜெய்யுடன் இணைந்து நடித்திருந்தார் அஞ்சலி. அந்த படத்தில் இருவரின் கெமிஸ்டிரி பக்காவாக இருந்தது. இதையடுத்து, இருவரும் காதலிப்பதாக சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கள் எழுந்தன. ஆனால், இது குறித்து இருவரும் வாய் திறக்காமல் இருந்தனர். மேலும், தமிழில் வாய்ப்பு குறைந்ததால் தெலுங்கிற்கு சென்று ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

கவர்ச்சி தூக்கலாக

கவர்ச்சி தூக்கலாக

தமிழில் அதிகம் கவர்ச்சி காட்டாத அஞ்சலி படவாய்ப்பு குறைந்ததால், கவர்ச்சிக்கு மாறினார். நான்கு இயக்குநர்களின் இயக்கத்தில் உருவான பாவக்கதைகள் அந்தாலஜியில் விக்னேஷ் சிவன் இயக்கிய 'லவ் பண்ணா உட்றனும்' என்ற பகுதியில், லெஸ்பியனாக உச்சக்கட்ட கவர்ச்சியில் நடித்திருந்தார். ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் RC15 திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

ஃபால் வெப் தொடர்

ஃபால் வெப் தொடர்

இந்நிலையில், நடிகை அஞ்சலி ஃபால் என்ற புதிய வெப் சீரிஸில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதில் எஸ்.பி.பி சரண், சோனியா அகர்வால், சந்தோஷ் பிரதாப், நமிதா கிருஷ்ணமூர்த்தி, தலைவாசல் விஜய் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

யார் நண்பர்

யார் நண்பர்

தற்கொலை முயற்சியில் ஈடுபடும் திவ்யாவிற்கு தற்கொலைக்கு முன் 24 மணிநேரத்தில் நடந்த சம்பவங்கள் மட்டுமே நினைவில் இருக்கிறது. இதில், யார் நண்பர், யார் எதிரி என அனைத்தையும் மறந்து, யாரை நம்புவது என தெரியாமல் தவித்து வருகிறாள். இதில் இருந்து திவ்யா எப்படி மீண்டார் என்பதை மிகவும் சுவாரசியமாக பரபரப்பாக கொண்டு சென்றுள்ளார் சித்தார்த் ராமசாமி.

இயக்குநர் சித்தார்த் ராமசாமி

இயக்குநர் சித்தார்த் ராமசாமி

இயக்குநர் சித்தார்த் ராமசாமி, கமல்ஹாசனின் மும்பை எக்ஸ்பிரஸ், தனுஷின் யாரடி நீ மோகினி, வசந்தபாலனின் அரவான் போன்ற படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். சித்தார்த் ராமசாமி, இந்த ஃபால் வெப் தொடருக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த வெப் தொடருக்கு அஜேஷ் இசையமைக்க, கிஷன் சி செழியன் படத்தொகுப்பைக் கையாள்கிறார். இந்த வெப் தொடர் விரைவில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X