அரக்கு நிற சேலையில் அம்சமாய் அஞ்சலி.. செம மாஸ் என ஜொள்ளும் ஃபேன்ஸ்!
சென்னை: நடிகை அஞ்சலி அரக்கு நிற சேலையில் அசத்தலாய் உள்ள போட்டோ ரசிகர்களின் லைக்ஸ்களை பெற்று வருகிறது.
நடிகை அஞ்சலி கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.
தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்த அஞ்சலி, தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

நான்கு மொழிகளில்
கடைசியாக பாவகதைகள் படத்தில் நடித்திருந்தார் அஞ்சலி. அதனை தொடர்ந்து தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழி படங்களில் நடித்து வருகிறார்.

எலும்பும் தோலுமாய்
கொழுக்மொழுக்கென்று இருந்த அஞ்சலி இடையில் எக்கச்சக்கமாக வெயிட்டை குறைத்து எலும்பும் தோலுமாய் ஆனார். அஞ்சலியின் எடை குறைந்த போட்டோக்களையும் வீடியோக்களையும் பார்த்த நெட்டிசன்கள் கொஞ்சம் வெயிட்டை கூட்டுங்கள் என கேட்டுக் கொண்டனர்.

வைரலாகும் போட்டோ
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள அஞ்சலி அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார். அஞ்சலி ஷேர் செய்யும் ஒவ்வொரு போட்டோவும் வீடியோவும் வைரலாகி வருகிறது.

அரக்கு நிற சேலையில்..
அந்த வகையில் தற்போது அஞ்சலி ஷேர் செய்திருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் ஆஹா ஓஹோவென புகழ்ந்துள்ளனர். அரக்கு நிற சேலையில் அசத்தலாய் உள்ளார் அஞ்சலி.

வாவ்.. வாட் எ பியூட்டி..
கேரவனுக்குள் எடுக்கப்பட்டது போல் தெரிகிறது இந்த போட்டோ. இதில் சேலை கட்டிக்கொண்டு உடம்பை பெண்ட் செய்து எதையோ ரசித்து ரசித்து சிரித்தப்படி உள்ளார் அஞ்சலி. அஞ்சலியின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வாவ்.. வாட் எ பியூட்டி என வாயை பிளந்துள்ளனர்.

ஐஸ்வர்யா ராஜேஷ் லைக்ஸ்
மேலும் சேலையில் தான் நீங்கள் மாஸ் என்றும் ஜொள்ளு விட்டுள்ளனர். அஞ்சலியின் இந்த சேலை போட்டோவை ஐஸ்வர்யா ராஜேஷ் லைக் செய்துள்ளார். நடிகை அஞ்சலியின் இந்த போட்டோ வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











