எமகாவை ஓட்டி கெத்துக் காட்டும் அஞ்சலி.. செம ஸ்டைல் போங்க.. ஜொள்ளும் ஃபேன்ஸ்!

சென்னை: நடிகை அஞ்சலி ஷேர் செய்துள்ள த்ரோபேக் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் செம என ஜொள்ளு விட்டுள்ளனர்.

நடிகை அஞ்சலி போட்டோ என்ற தெலுங்கு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து கற்றது தமிழ் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

தமிழில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ள அஞ்சலி, தெலுங்கு கன்னடம் மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.

 தமிழ் தெலுங்கில் பிஸி

தமிழ் தெலுங்கில் பிஸி

அடிக்கடி கிசுகிசுவிலும் சிக்கி வருகிறார் அஞ்சலி. குறிப்பாக நடிகர் ஜெய்யுடன் அஞ்சலியின் பெயர் அடிக்கடி அடிப்பட்டுள்ளது. நடிகை அஞ்சலி நிஷப்தம், ஆனந்த பைரவி, வக்கீல் சாப் ஆகிய தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ஓ, பாவ கதைகள் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

 ஹெல்த் கான்ஷியஸ்

ஹெல்த் கான்ஷியஸ்

கடந்த சில மாதங்களாக லாக்டவுன் காரணமாக வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்தார் அஞ்சலி. ஆனாலும் உடற்பயிற்சி, யோகா என உடல்நலனிலும் அக்கறை கொண்டார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள அஞ்சலி அடிக்கடி தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார்.

 பழைய ஃபார்மில்..

பழைய ஃபார்மில்..

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அஞ்சலி ஷேர் செய்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவர் எலும்பும் தோலுமாய் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் மீண்டும் பழைய ஃபார்முக்கு வந்துள்ள அஞ்சலி கும்மென்று மாறியுள்ளார்.

 எமகாவில் அஞ்சலி

எமகாவில் அஞ்சலி

அண்மையில் வாக்கிங் ஜாக்கிங் சென்ற போட்டோக்களையெல்லாம் ஷேர் செய்த அஞ்சலி, தொடர்ந்து தன்னுடைய க்ளோஸப் போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்தார். இந்நிலையில் சுடிதாரில் எமகா ஓட்டும் தன்னுடைய பழைய போட்டோவை ணேர் செய்துள்ளார் அஞ்சலி.

 லிஃப்ட் தருவீங்களா?

லிஃப்ட் தருவீங்களா?

அதனை பார்த்த நெட்டிசன்கள், எங்களுக்கு லிஃப்ட் கொடுப்பீங்களாக என்று கேட்டு வருகின்றனர். அஞ்சலியின் இந்த போட்டோ லைக்ஸை குவித்து வருவதோடு வைரலாகி வருகிறது.

Read more about: anjali அஞ்சலி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X