வாய்ப்புக்காக பிரபல தயாரிப்பாளர் படுக்கைக்கு அழைத்தார்.. பகீர் கிளப்பும் சுஷாந்தின் முன்னாள் காதலி!
சென்னை: சுஷாந்தின் முன்னாள் காதலியான அங்கிதா லோஹண்டே தனக்கும் சினிமாவில் பாலியல் தொல்லைகள் இருந்ததாக கூறியுள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஆண்டு ஜூன் மாதம் மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவருடைய முன்னாள் காதலி அங்கிதா லொஹண்டே. இருவரும் தொலைக்காட்சி சேனலில் பணியாற்றிய போது இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது.

சுஷாந்தின் காதலி
இருவரும் சுமார் 6 வருடங்கள் காதல் உறவில் இருந்தனர். பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இந்நிலையில் நடிகை அங்கிதா லோஹண்டே திரைத்துறையில் தான் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

2 முறை பாலியல் தொல்லை
இதுதொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் பேசியிருப்பதாவது, நான் இரண்டு முறை பாலியல் தொல்லைகளை அனுபவித்துள்ளேன். என்னுடைய கேரியரை தொடங்கும் போது ஒரு முறையும் மற்றொரு முறை ஒரு பெரிய நடிகர் என்னை அதற்கான சிக்னல் காட்டினார்.

காம்ப்ரமைஸ் செய்வீர்களா?
தென்னிந்திய படம் ஒன்றில் நடிப்பதற்காக ஆடிஷனுக்கு சென்றேன். அப்போது அந்த தயாரிப்பாளரின் மேனேஜர் தயாரிப்பாளருடன் எல்லாவற்றுக்கும் காம்ப்ரமைஸ் செய்வீர்களா என்று கேட்டார். அப்போது அந்த ரூமில் நான் மட்டும்தான் தனியாக இருந்தேன்.

பார்ட்டிக்கு போகணுமா?
அதற்கு உங்கள் தயாரிப்பாளருக்கு என்ன மாதிரியான காம்ப்ரமைஸ் வேண்டும் என்றேன். நான் அவருடன் பார்ட்டிக்கு செல்ல வேண்டுமா? டின்னருக்கு போக வேண்டுமா என்று கேட்டேன். அதற்கு அவர் படுக்கையை ஷேர் செய்ய வேண்டும் என்றார். அப்போது எனக்கு 19 அல்லது 20 வயதுதான் இருக்கும்.

படுக்கத்தான் விருப்பமா?
அதற்கு உங்கள் தயாரிப்பாளருக்கு டேலன்ட்டான பெண்ணுடன் பணியாற்ற விருப்பமில்லை, படுக்கத்தான் விருப்பமாக இருக்கிறார் என்றேன். உடனே அந்த நபர் என்னிடம் மன்னிப்பு கேட்டார். இந்த படத்தில் உங்களை நடிக்க வைக்க முயற்சி செய்கிறேன் என்றார்.

நடிகருடன் கைக்குலுக்கினேன்
ஆனால் நான் நீங்கள் முயற்சி செய்யுங்கள் ஆனால் நான் உங்கள் படத்தில் நடிக்க விரும்பவில்லை என்று கூறி அங்கிருந்து வெளியேறிவிட்டேன். அடுத்து இரண்டாவது முறையாக இதேபோன்று ஒரு சம்பவத்தை சந்தித்தேன். மீண்டும் நான் படங்களில் நடிக்க தொடங்கிய போது ஒரு நடிகரிடம் கை குலுக்கினேன்.

என்னிடம் பலிக்கவில்லை
அந்த நடிகரின் பெயரை சொல்ல விரும்பவில்லை. அப்போது அவர் ஒரு பெரிய ஹீரோ. அவரிடம் கைக்குலுக்கிய போது, அவருடைய அந்த வைப்ரேஷனை உணர்ந்தேன். உடனே அவரிடமிருந்து எனது கைகளை விலக்கி கொண்டேன். அவருடைய வேலை என்னிடம் பலிக்கவில்லை. இது மாதிரியான இரண்டு அனுபவங்களை நான் சந்திதுள்ளேன்.


Click it and Unblock the Notifications











