கொரோனாவால் ஊருக்குத் திரும்ப முடியலையே.. அமெரிக்காவில் இருக்கும் முன்னாள் ஹீரோயின் கவலை!

By

சென்னை: அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பமுடியவில்லை என்று பிரபல முன்னாள் ஹீரோயின் கவலையுடன் தெரிவித்துள்ளார்.

Recommended Video

அரசுகளுக்கு நிவாரண நிதி அளிக்கும் திட்டமில்லை.. நடிகர் அதிரடி! இன்றைய டாப் 5 பீட்ஸில்! - வீடியோ

சுந்தர். சி இயக்கத்தில் பிரசாந்த், மும்தாஜ், விஜயகுமார், ஶ்ரீவித்யா, வடிவேலு, நளினி உட்பட பலர் நடித்த படம், லண்டன்.

காமெடி படமான இதில் ஹீரோயினாக நடித்திருந்தவர் அங்கிதா. இந்தப் படம் 2005 ஆம் ஆண்டு வெளியானது.

தகதிமிதா

தகதிமிதா

இதையடுத்து சுந்தர் சி இயக்கிய தகதிமிதா என்ற படத்திலும் ஹீரோயினாக நடித்திருந்தார் அங்கிதா. இந்தப் படத்தில் யுவகிருஷ்ணா, விவேக், எம்.எஸ்.விஸ்வநாதன், பரவை முனியம்மா உட்பட பலர் நடித்திருந்தனர். இதையடுத்து ரவி பார்கவன் இயக்கிய, திரு ரங்கா படத்தில் நடித்த அங்கிதா, தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.

திருமணம்

திருமணம்

இவர், மும்பை தொழிலதிபர் விஷால் ஜக்தப் என்பவரை கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். திருமணத்துக்குப் பிறகு அமெரிக்கா சென்றுவிட்டார். அங்கு நியூஜெர்சியில் கணவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கொரோனா தொற்று உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. உலகம் முழுவதும் இதன் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன.

உலகம்

உலகம்

சீனாவில் உருவான இந்த தொற்றால், அமெரிக்கா கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. அங்கு தினமும் கொத்துக் கொத்தாக பலர் உயிரிழந்து வருகின்றனர். இந்த வைரஸுக்கு ஹாலிவுட் பிரபலங்கள் உட்பட பலர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன.

கண்ணீர் வீடியோ

கண்ணீர் வீடியோ

இந்நிலையில் நடிகை அங்கிதா, ஒவ்வொரு வருடமும் இந்தியாவுக்கு திரும்பி, குடும்பத்தினருடன் சில மாதங்கள் செல்வழிப்பார். இந்த முறை அப்படி வரமுடியவில்லை என்று அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: நியூஜெர்சியில் இருக்கிறேன். அமெரிக்காவின் பெரும்பாலான நகரங்களில் பதற்றம் நிலவுகிறது.

அழுதபடி இருக்கிறேன்

அழுதபடி இருக்கிறேன்

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களால் மருத்துவமனைகள் நிரம்பிவிட்டன. நாளுக்கு நாள் பயம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. வெளியில் பொருட்கள் வாங்க கூட யாரும் செல்வதில்லை. எனது அம்மாவை நினைத்து தினமும் அழுதபடியே இருக்கிறேன். வீட்டை விட்டு எங்கும் போக முடியவில்லை. மும்பையில் உள்ள எனது குடும்பத்தினரைச் சந்தித்து ஒரு வருடமாகிவிட்டது என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X