நடிகை அன்னபூர்ணாவின் மகள் கீர்த்தி தூக்கு போட்டு தற்கொலை

By Siva

ஹைதராபாத்: நடிகை அன்னபூர்ணாவின் மகள் கீர்த்தி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்து வருபவர் அன்னபூர்ணா. அவரின் மகள் கீர்த்தி(35). மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கீர்த்திக்கும், வெங்கடகிருஷ்ணா என்ற சாப்ட்வேர் என்ஜினியருக்கும் திருமணம் நடைபெற்றது.

Actress Annapurnas daughter commits suicide

ஹைதராபாத்தில் உள்ள பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் தனது கணவருடன் வசித்து வந்தார் கீர்த்தி. அவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் அவர் நேற்று காலை தூக்கில் பிணமாக தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

மன ரீதியான பிரச்சனை இருந்ததால் கடந்த 6 மாதங்களாக கீர்த்தி சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த காரணத்தால் தூக்கமின்மை, மனஅழுத்தத்தால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

உடல் மற்றும் மன பிரச்சனையால் அவர் தற்கொலை செய்திருக்கக்கூடும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். வெள்ளிக்கிழமை பெங்களூருவில் இருந்து ஹைதராபாத் திரும்பிய வெங்கடகிருஷ்ணா இரவு 2 மணிக்கு வீட்டிற்கு வந்துள்ளார்.

வேறு அறையில் அவர் தூங்க, கீர்த்தி படுக்கை அறையில் தூங்கியுள்ளார். காலையில் படுக்கை அறைக்கு சென்ற வெங்கடகிருஷ்ணா தனது மனைவி தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்து மாமியாருக்கு தகவல் கொடுத்தார். அன்னபூர்ணா போலீசாருக்கு தகவல் கொடுக்க அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கீர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X