Anu Emmanuel - என்னை படுக்கைக்கு அழைத்தபோது நான் அதை செய்தேன்.. சிவகார்த்திகேயன் பட நடிகை ஓபன் டாக்

சென்னை: Anu Emmanuel (அனு இம்மானுவேல்) தன்னை படுக்கைக்கு அழைத்தபோது செய்த விஷயம் குறித்து நடிகை அனு இம்மானுவேல் ஓபனாக பேசியிருக்கிறார்.

சினிமாவில் காலங்காலமாக அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்னை இருந்துவருகிறது. நடிக்க வேண்டும் என்ற கனவோடு வரும் பெண்களுக்கு இந்தப் பிரச்னை பெரும் தொல்லையாக இருக்கிறது. இதன் காரணமாக நடிக்க வேண்டும் என்று ஆர்வம் உடைய பெண்கள் பலர் சினிமாவுக்குள் நுழைவதற்கே அச்சப்பட்டு தங்களது ஆர்வத்தை அழித்துக்கொள்கின்றனர்.

Actress Anu Emmanuel Open Talks about Adjustment issue in Cinema

ஹீரோயின்களின் ஓபன் டாக்: அட்ஜெஸ்ட்மெண்ட்டால் தாங்கள் சந்திக்கும் கொடுமை குறித்து நடிகைகள் வெளியில் பேசுவது அரிதிலும் அரிதுதான். ஆனால் சமீபகாலமாக தைரியமாக அனைத்தையும் பேசிவருகின்றனர். லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாராவிடம்கூட அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கான அப்ரோச் போயிருப்பதாக அவர் ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

வாரிசு நடிகைக்குமா?: அதேபோல் பிரபல நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமியும் தன்னிடம் அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து அப்ரோச் செய்ததாக தெரிவித்திருந்தார். வரலட்சுமி அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து பேசியதும் திரைத்துறையே அதிர்ச்சியானது. ஏனென்றால் சினிமா பின்னணி இல்லாமல் வருபவர்களிடம்தான் அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து எளிதாக அப்ரோச் செய்வார்கள் என்று நினைத்திருந்த சமயத்தில் சினிமா பின்னணி இருக்கும் கதாநாயகிக்கும் இதே நிலைமைதானா என்று பலரும் கேள்வி எழுப்ப தொடங்கினர்.

பிற நடிகைகள்: இவர்கள் தவிர நடிகை ரெஜினா உள்ளிட்ட பிற நடிகைகளும் தங்களிடம் நிகழ்ந்த அட்ஜெஸ்ட்மெண்ட் அப்ரோச் குறித்து ஓபனாக பேசியிருக்கின்றனர். ரெஜினா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு 20 வயது இருக்கும்போது ஒரு நபர் எனக்கு ஃபோன் செய்து அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு ஓகேயா என கேட்டதாக தெரிவித்திருந்தார். தற்போது நடிகை அனு இம்மானுவேலும் அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து பேசியிருக்கிறார்.

Actress Anu Emmanuel Open Talks about Adjustment issue in Cinema

அனு பேட்டி: ஒரு பேட்டியில் இதுகுறித்து பேசிய அவர், "நான் சினிமாவுக்கு வந்த புதிதில் பலர் என்னிடம் தவறான நோக்கத்துடன் அணுகினார்கள். சில அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கும் அழைத்தார்கள். ஆனால் நான் அதைக் கண்டு அஞ்சாமல் குடும்பத்தினரின் துணையுடன் சமாளித்தேன். இந்த மாதிரியான சமயத்தில் தனியாக சமாளிப்பதைவிட குடும்பத்தின் துணையோடு சமாளிப்பது நல்லது" என்றார்.

சிவகார்த்திகேயன் ஜோடி: அனு இம்மானுவேல் கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட அனு இம்மானுவேல் அமெரிக்காவில் பிறந்தவர். இவரது தந்தை தென்கச்சன் இம்மானுவேல் பிரபல தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கிய துப்பறிவாளன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரிகொடுத்தார் அனு. அதனைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த நம்ம வீட்டுப்பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது அவர் ராஜுமுருகன் இயக்கத்தில் ஜப்பான் படத்தில் நடித்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X