வந்ததே இரண்டு சீன்.. அதுக்கா இந்த சம்பளம்.. ஜப்பான் படத்திற்காக அனு இமானுவேல் வாங்கிய சம்பளம்!
சென்னை: கார்த்தி நடிப்பில் வெளியான ஜப்பான் படத்தில் நடித்த அனு இமானுவேல் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
கார்த்தியின் 25வது படமான ஜப்பான் படத்தில் அனு இம்மானுவேல், சுனில் வர்மா, விஜய் மில்டன், பவா செல்லதுரை, ஜித்தன் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

சமூக கருத்துக்களை உள்ளடக்கிய படங்களை எடுக்கும் ராஜு முருகன் ஒரு கமர்சியல் படத்தை இயக்கி உள்ளார். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாக இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
கார்த்தியின் 25வது படம்: திருடன் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு இடையே நடக்கும் சடுகுடு ஆட்டம் தான் ஜப்பான் படத்தின் அடிப்படை கதை. கோவையில் மிகப்பெரிய நகைக்கடையில் 200 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்படுகிறது. இந்த நகைக்கடையில் உள்துறை அமைச்சரின் குடும்பத்துக்கும் பங்கு இருப்பதால் காவல்துறைக்கு அழுத்தம் கொடுக்கிறது. அதன் பிறகு என்ன ஆனது என்பதுதான் ஜப்பான் படத்தின் கதை.

ஜப்பான் திரைப்படம்: கைதி, பொன்னியின் செல்வன் என பல ஹிட் திரைப்படங்களை கொடுத்த கார்த்தி இந்த படத்தில் தனது ஒட்டுமொத்த திறமையை காட்டி நடித்த போதும், படத்தின் திரைக்கதையில் இயக்குநர் கோட்டை விட்டதால், படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. தீபாவளிக்கு வெளியான இந்த படத்திற்கு முதல் நாள் மட்டுமே தியேட்டரில் ஆட்களைப் பார்க்க முடிந்தது. அடுத்தடுத்த நாட்களில் தியேட்டரில் காற்று வாங்கியது.
மிகப்பெரிய தோல்வி படம்: நடிகர் கார்த்தியின் கெரியரில் மிகப்பெரிய தோல்வி படமாக ஜப்பான் இருக்கும் என கூறப்படுகிறது. ரிலீஸ் ஆகி ஒருவாரம் கூட ஆகாத நிலையில், ஜப்பான் படத்தை தியேட்டரில் இருந்து தூக்கிவிட்டு, ராகவா லாரன்ஸின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மற்றும் லியோ படத்தை திரையிட்டனர். மேலும் இத்திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

அனு இமானுவேல் சம்பளம்: இந்நிலையில், இந்த படத்தில் கதாநாயகி என்று பெயர் அளவுக்கு வந்த அனு இமானுவேல் இந்த படத்திற்காக வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதில் இந்த படத்திற்கு சம்பளமாக அவர் ரூபாய் 72 லட்சத்தை பெற்றுள்ளார். இந்த கேள்விப்பட்ட ரசிகர்கள், நடிச்ச ஒன்னு இரண்டு காட்சிக்கு இத்தனை லட்சம் சம்பளமா என கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











