படவாய்ப்பு வேண்டுமென்றால் படுக்கைக்கு வா..அனு இம்மானுவேல் சொன்ன ஷாக் நியூஸ்!

சென்னை: படவாய்ப்பு வேண்டுமென்றால் படுக்கைக்கு வா என்று என்னையும் அழைத்தார்கள் என்று நடிகை அனு இம்மானுவேல் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் பிறந்த அனு இமானுவேல், இந்தியாவில் பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தார்.

Actress anu emmanuel Said about adjustment in cinema

பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போதே இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்ததை அடுத்து, சுவப்னா சஞ்சரி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

நடிகை அனு இம்மானுவேல்: மலையாளத்தில் நிவின் பாலி நாயகனாக நடித்த ஆக்சன் ஹீரோ பிஜூவில் அனு இம்மானுவேல் முதன் முதலாக ஹீரோயினாக நடித்திருந்தார். இதையடுத்து, தமிழில் 2017 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளிவந்த துப்பறிவாளன் படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் வந்து போனார்.

Actress anu emmanuel Said about adjustment in cinema

காந்த கண்ணழகி: இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நம்ம வீட்டுபிள்ளை திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் வரும் காந்த கண்ணழகி பாடலுக்கு ஏற்றால் போல, லுக்குவிட்டு ரசிகர்களை கிக்கேற்றினார் அனு இமானுவேல். இந்த படத்திற்கு பின் படவாய்ப்பு வரும் என்று எதிர்பார்த்த இவருக்கு தமிழில் படவாய்ப்பு வராததால் டோலிவுட் பக்கம் சென்றார்.

Actress anu emmanuel Said about adjustment in cinema

படுக்கைக்கு வா: இதையடுத்து, அம்மணிக்கு தெலுங்கில் படவாய்ப்புகள் குவிந்ததை அடுத்து, அங்கேயே செட்டிலான அனு இமானுவேல் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசி உள்ளார். அதில், படவாய்ப்பு வேண்டுமென்றால் படுக்கைக்கு வா என்று என்னையும் பலர் அழைத்து இருக்கிறார்கள். ஆனால், இதை நினைத்து பயப்படாமல் என்னுடைய குடும்பத்தினரின் துணையுடன் எதிர்கொண்டு சமாளித்தேன்.

பயப்படக்கூடாது: இது போன்ற நேரத்தில், தனியாக பிரச்சனைகளை சமாளிப்பதை விட, குடும்பத்தினருடன் சேர்ந்து எதிர்கொள்வது நல்லது. இது போன்ற நேரத்தில் நம் குடும்பத்தினரால் மட்டும்தான் நமக்கு உதவ முடியும் என்றார். மேலும், பெண்களை முன்னேற விடாமல் தடுப்பது இதுபோன்ற மோசமான நபர்கள் தான், அவர்களைப் பார்த்து பெண்கள் பயப்படாமல் துணிந்து முன்னேற வேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X