அனுஹாசனுக்கு இன்று பிறந்த நாள்... சமூகவலைத்தளங்களில் குவியும் வாழ்த்து !

சென்னை : தொலைக்காட்சிகளின் மூலமும் திரைப்படங்களின் மூலமும் நாம் அனைவரையும் பல ஆண்டுகளாக மகிழ்ச்சிபடுத்தி வருபவர் நடிகை அனுஹாசன்.

டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதின் மூலம் மிகவும் பிரபலமாக வலம் வந்த இவர் தற்பொழுது படங்களிலும் நடித்து வருகிறார்.

காபி வித் அனு என்ற தொகுத்து வழங்கிய தனித்துவமான நிகழ்ச்சிக்காக பல லட்சம் ரசிகர்கள் இவருக்கு குவிய தொடங்கினர்.

தனித்துவமான திறமையை

தனித்துவமான திறமையை

உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் மணிரத்னம் ஆகிய மிகப்பெரிய திரைத்துறை ஜாம்பவான்களின் நெருங்கிய உறவினரான அனுஹாசன் தற்பொழுது தமிழ் திரைப்படத் துறையிலும் தொலைக்காட்சிகளிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களின் மூலம் தனது தனித்துவமான திறமையை வெளிக்காட்டி பல்வேறு தரப்பு மக்களையும் கவர்ந்து வருகிறார்.

அன்புள்ள சினேகிதியே

அன்புள்ள சினேகிதியே

நடிப்பு துறையைப் பொறுத்தவரையில் திரைப்பட குடும்பத்திலேயே பிறந்த இவர் மிக மிக விரைவாகவே திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். அன்புள்ள சினேகிதியே என்ற சீரியல் தொடரின் மூலம் நடிப்பிற்கு அறிமுகமான இவர் தொடர்ந்து பல்வேறு சீரியல்களில் நடித்து மலையாளத்திலும் மிக பிரபலமானார்.

திரைநட்சத்திரங்களுடன்

திரைநட்சத்திரங்களுடன்

இவ்வாறு சீரியலில் கொடிகட்டி பறந்த அனுஹாசன் பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான காபி வித் அனு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பல்வேறு திரைநட்சத்திரங்களுடன் கலந்துரையாடி காபி வித் அனு நிகழ்ச்சியை வெற்றிகரமாக தொகுத்து வழங்கி பல ஆண்டுகள் தொடர்ந்து மக்களை ரசிக்க வைத்தார்.

அரவிந்த் சாமியுடன்

அரவிந்த் சாமியுடன்

இயக்குனர் மணிரத்தினத்தின் துணைவியாகவும் பிரபல நடிகையாகவும் நம் அனைவரும் அறிந்த நடிகை சுஹாசினி முதன்முதலில் இயக்கிய இந்திரா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அனுஹாசன் திரைத்துறையில் அறிமுகம் செய்யப்பட்டு அரவிந்த்சாமியுடன் இணைந்து தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பலரது பாராட்டுகளையும் பெற்றார்.

குணச்சித்திர கதாபாத்திரங்களிலும்

குணச்சித்திர கதாபாத்திரங்களிலும்

இவ்வாறு நடிப்பிலும் தனது காலடி பதித்து வந்த அனுஹாசன் தொடர்ந்து ரன், ஆளவந்தான், ஆதவன், தாம்தூம், மாஞ்சாவேலு உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் வந்து கலக்கியிருக்கிறார்.

சன்னி சைட் அப்

சன்னி சைட் அப்

இவ்வாறு திரைத்துறையில் உள்ள பல வேலைகளிலும் கைதேர்ந்தவரான அனுஹாசன் உயிரே, ஆளவந்தான், நல தமயந்தி உள்ளிட்ட படங்களில் கதாநாயகிகளுக்கு பின்னணி குரலும் கொடுத்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சன்னி சைட் அப் என்ற புத்தகத்தையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

பன்முக நாயகி

பன்முக நாயகி

இவ்வாறெல்லாம் திரைத்துறையில் பல முகங்களைக் கொண்டு நாம் அனைவரையும் தொடர்ந்து ரசிக்க வைத்து வரும் பன்முக நாயகி அனுஹாசன் இன்று தனது பிறந்தநாளை மிக மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார்.

பிறந்த நாள்

பிறந்த நாள்

ஜூலை 15 ஆம் தேதியான இன்று இவர் தனது 50வது பிறந்தநாளை அனைவரின் ஆசீர்வாதங்களுடன் கொண்டாடி வருவதையொட்டி இவருக்கு பலரும் வாழ்த்து மழையில் தூவி வரும் நிலையில் இவரது நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என எக்கச்சக்கமான வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X