புடிச்சாலும் புளியம் கொம்புதான்.. வாரிசு நடிகருடன் ரகசிய காதலில் நம்ம வீட்டுப்பிள்ளை நடிகை!
சென்னை: பிரபல நடிகையான அனு இமானுவேல் வாரிசு நடிகருடன் ரகசிய காதலில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மலையாள மொழியில் ஸ்வப்னா சன்ச்சாரி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனு இமானு வேல்,
அடுத்து மலையாளத்தில் வெளியான தனது இரண்டாவது படமான ஆக்ஷன் ஹீரோ பிஜூ என்ற படத்திலேயே ஹீரோயினாக அறிமுகமானார்.

நம்ம வீட்டுப்பிள்ளை
தொடர்ந்து தெலுங்கில் ஏராளமான படங்களில் கமிட்டான அனு இமானுவேல் தமிழில் விஷாலின் துப்பறிவாளன் படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னல் சிவ கார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டுப்பிள்ளை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.

ரகசிய காதல்
தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகி வரும் மகா சமுத்திரம் என்ற படத்தில் நடித்து வருகிறார் அனு இமானுவேல். இந்நிலையில் அனு இமானுவேலின் ரகசிய காதல் குறித்த தகவல் கோலிட்டிலும் டோலிவுட்டிலும் பெரும் பேச்சாக மாறியுள்ளது.

அல்லு சிரிஷுடன் காதல்
அதாவது தெலுங்கு சினிமாவின் பிரபல தயாரிப்பாளரான அல்லு அரவிந்தின் மகனும், நடிகர் அல்லு அர்ஜூனின் சகோதரருமான அல்லு சிரிஷும் நடிகை அனு இமானுவேலும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இருவரும் தங்களின் காதலை ரகசியமாக வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இருவரும் நெருக்கம்
சமீபத்தில் அனு இம்மானுவேல் பிறந்தநாள் கொண்டாடினார். அப்போது அவரை வாழ்த்தி அல்லு சிரிஷ் ஒரு வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோவில் இருவரும் நெருக்கமாக உள்ளனர்.

காதல் உறுதி..
மேலும் அந்த வீடியோவில் அனுவை சைக்கோ என்றும் செல்லமாக அழைத்து உள்ளார் அல்லு சிரிஷ். இந்த வீடியோ வைரலான நிலையில் இதன் மூலம் அவர்கள் இடையிலான காதல் உறுதியாகி இருப்பதாக தெலுங்கு சினிமாவில் பேச்சாக உள்ளது.

மைத்துனர் மகன்
நடிகர் அல்லு சிரிஷ் தெலுங்கில் வளரும் நடிகராக வலம் வருகிறார். அல்லு சிரிஷ் தமிழில் வெளியான கவுரவம் படத்தில் நடித்துள்ளார். இவர் நடிகர் சிரஞ்சீவியின் மைத்துனர் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











