பயில்வானை கூட மன்னிப்பேன்.. ஆனால், நீ.. ரிஹானாவை விளாசிய நடிகை!
சென்னை: விளம்பரத்திற்காக அடுத்தவர்களின் பாத்ரூமை எட்டிபார்த்துவிட்டு, அவர்களை அசிங்கமாக பேசும் வேலையைத்தான் பயில்வான் செய்து கொண்டு இருக்கிறார். அவரை யாருமே ஏன் கேள்வி கேட்பது இல்லை என்று புரியவில்லை. பணத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாமா என நடிகை அனு பரமி கேள்வி எழுப்பி உள்ளார்.
நடிகை அனு பரமி, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, நாயன்மார்கள், மதுரை, ஆண்டாள் அழகர், சரவணன் மீனாட்சி ஆகிய சீரியல்களில் நடித்துள்ள இவர், ஒரு சில திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவர் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், இந்த பேட்டிக்கு நான் வர காரணமே நீங்க தான், ஏன் என்றால் பெண்களுக்கு பெண்கள் தான் எதிரி என்பார்கள் அப்படித்தான் நீங்கள் கேமரா முன்னாடி அமர்ந்து கொண்டு பேசுகிறீர்கள். உங்கள மாதிரி உள்ள ஆட்களுக்கு எல்லாம் பூனைக்கு யார் மணி கட்டுவது என்கிற வேலையைத்தான் நான் செய்து கொண்டு இருக்கிறேன். எந்த தனி மனிதரோட அந்தரங்கமும் மதிக்கப்பட வேண்டும். அதை, நீங்கள் கேமரா முன்னாடி அமர்ந்து கொண்டு பேசி, பணமாக்கி வருகிறீர்கள்.

பொம்பள பயில்வான்: விளம்பரத்திற்காக நீங்க நான் இதை செய்கிறீர்கள், அடுத்தவர்களின் பாத்ரூமை எட்டிபார்த்துவிட்டு, அவர்களை அசிங்கமாக பேசும் வேலையைத்தான் பயில்வான் செய்து கொண்டு இருக்கிறார். அவரை யாருமே ஏன் கேள்வி கேட்பது இல்லை என்று புரியவில்லை. அதே வேலையைத்தான் ரிஹானாவான நீங்க செய்து கொண்டு இருக்கிறீர்கள். பயில்வான் ஒரு ஆண், அவருக்கு பெண்களின் வலி, பெண்களின் புரிதல், உணர்வு என எதுவுமே தெரியாது என்பதால், அவரை கூட மன்னித்துவிட்டுவிடலாம். ஆனால், நீங்க ஒரு பெண், உங்களுக்கு அவர்களின் வலி, அவர்கள் சந்திக்கும் பிரச்சனை என எல்லாமே தெரியும். அப்படி இருக்கும் போது, பேட்டி கொடுக்க வரும் நடிகைகளிடம் அட்ஜெஸ்ட்மென்ட் பத்தியே கேள்வி கேட்பது ஏன்.

கேவலமான பப்ளிசிட்டி: அது மட்டுமில்லாமல், என்னிடம் ஒரு பெரிய நடிகர் படுக்கைக்கு அழைத்தார் என்று வெளிப்படையாக ஒரு பேட்டியில் சொல்லி, கேவலமான பப்ளிசிட்டி தேடி கொண்டீர்கள். சினிமாவில் நடிக்க வந்து விட்டால், எல்லா ஆண்களுக்கும் பெண்களின் உடல் மீது தான் பார்வை போகும் இது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இப்படி தெரிந்து இருந்தும், விளம்பரத்திற்காக ஒருத்தன் கூப்பிட்டான் என்று சொல்லுவது அசிங்கமா இல்ல, நீங்க கொடுத்த பேட்டியைப் பார்த்துவிட்டு பலர், நீ பத்தினியா, உத்தமியா, ஒழுக்கமானவளா என்று கேட்கிறார்கள். இதைப்பார்த்த உண்மையாக பாதிக்கப்பட்ட ஒரு பெண் இது பற்றி பேசுவதற்கு பயப்படுகிறார்கள், அவர்களுக்கு நீங்கள் முட்டுக்கட்டையாக இருக்கிறீர்கள். எதுக்கு இந்த பொழப்பு என்று நடிகை அனு பரமி, நடிகை ரிஹானாவை வெளுவெளுவென வெளுத்துவிட்டார்.

இதைப்பார்த்த உண்மையாக பாதிக்கப்பட்ட ஒரு பெண் இது பற்றி பேசுவதற்கு பயப்படுகிறார்கள்,அவர்களுக்கு நீங்கள் முட்டுக்கட்டையாக இருக்கிறீர்கள். எதுக்கு இந்த பொழப்பு என்று நடிகை அனு பரமி, நடிகை ரிஹானாவை வெளுவெளுவென வெளுத்துவிட்டார்.


Click it and Unblock the Notifications











