சுருட்டை முடி அழகியின்… வேறலெவல் விழிப்புணர்வு… நீங்க எதுபண்ணாலும் அழகுதான் !
சென்னை : தமிழில் நீண்ட இடைவெளிக்குப்பின் அதர்வாவுக்கு ஜோடியாக தள்ளிப்போகாதே திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர், வித்தியாசமான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் ரசிகர்களால் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

பல மொழிகளில்
நடிகை சாய் பல்லவி, மடோனா செபாஸ்டின் ஆகியோர் நடிப்பில் வெளியான பிரேமம் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். தற்போது இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களில் நடித்து வருகிறார்.

தெலுங்கில் கவனம்
தனுஸ் இரட்டை வேடத்தில் நடித்த கொடிபடத்திற்கு நல்ல அம்சமான அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன். அந்த படத்திற்கு பிறகு தமிழில் அதிக படங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இவருக்குபட வாய்ப்புகள் சரியாக வரவில்லை. இதனால் தெலுங்கு பக்கம் தனது கவனத்தை திருப்பி இவர், தேஜ் ஐ லவ் யூ, உன்னடி ஒகடே சிந்தகி, ஹலோ குரு ப்ரோமோ ஆகிய தெலுங்கு படங்களில் நடித்தார்.

தள்ளிப்போகாதே படத்தில்
தற்போது இவர், அதர்வா முரளிவுடன் தள்ளிப்போகாதே படத்தில் நடித்து வருகிறார். மேலும், ஒரு மலையாள படத்திலும் நடித்து வருகிறார். இணையத்தில் தனது புகைப்படத்தை தினம் தினம் அப்லோடு செய்து வரும் இவர், ரசிகர்களை தன் வசம் வைத்துக்கொள்ள சோஷியல் மீடியாக்களில் எப்போதும் ஆக்டீவாக இருக்கிறார்.

மாஸ்க்கில் பூ
தற்போது இவர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் , கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாஸ்க்கில் பூ வைத்துக்கொண்டு பக்காவாக போஸ்கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவித்து வரும் நிலையில், அட இதுவேற மாதிரி விழிப்புணர்வால இருக்கு என்று ரசிகர்கள் கேட்டு வேளையில் ஒரு சில ரசிகர்கள் நீங்க எது பண்ணாலும் அழகுதான் என வர்ணித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











