ஏகப்பட்ட வித்தையை கையில வச்சுருக்காங்க அனுபமா.. இப்ப என்ன செஞ்சிருக்காங்க பாருங்க!

சென்னை : கடந்த 2015ம் ஆண்டில் வெளியான பிரேமம் படத்தில்தான் தன்னுடைய அறிமுகத்தை கொடுத்திருந்தார் அனுபமா பரமேஸ்வரன்.

இந்தப் படம் இவருக்கு சிறப்பாக அமைந்த நிலையில், அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிசியாக நடித்து வருகிறார்.

தமிழிலும் இரண்டு படங்களில் நடித்துள்ள இவர், சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார்.

நடிகை அனுபமா

நடிகை அனுபமா

நடிகை அனுபமா பரமேஸ்வரன் மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தில்தான் தன்னுடைய அறிமுகத்தை கொடுத்தார். கடந்த 2015ம் ஆண்டில் வெளியான இந்தப் படத்தில் அனுபமா, சாய் பல்லவி, மடோனா சபாஸ்டியன் ஆகியோர் அறிமுகம் ஆனார்கள். இவர்களில் சாய் பல்லவி மிகவும் பிசியாக ஹீரோயினாக மாறியுள்ளார்.

அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்த படங்கள்

அனுபமா பரமேஸ்வரனும் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிசியாக நடித்து வருகிறார். தமிழில் தனுஷுடன் இணைந்து கொடி படத்திலும் அதர்வாவுடன் இணைந்து நடித்த தள்ளிப் போகாதே படமும் இவர் நடிப்பில் வெளியான நிலையில், தொடர்ந்து தமிழில் இவர் மற்ற படங்களில் கமிட்டாகவில்லை.

 கார்த்திகேயா 2 படம்

கார்த்திகேயா 2 படம்

கடந்த வாரத்தில் இவரது நடிப்பில் கார்த்திகேயா 2 படம் வெளியானது. க்ரைம் திரில்லராக வெளியான இந்தப் படம் ஒரே வாரத்தில் இரண்டு மடங்கு லாபத்தை தயாரிப்பாளருக்கு பெற்றுத் தந்துள்ளது. தொடர்ந்து திரையரங்குகளில் சிறப்பாக ஓடி வருகிறது. முன்னதாக இந்தப் படத்தின் பிரமோஷனில் அனுபமா ஈடுபடவில்லை என்ற குற்றச்சாட்டிற்கும் உள்ளானார்.

 பாலிவுட்டில் பட வாய்ப்பு

பாலிவுட்டில் பட வாய்ப்பு

இந்தப் படத்தின் வெற்றி தற்போது அனுபமாவிற்கு பாலிவுட்டிலும் பட வாய்ப்பை பெற்றுத் தந்துள்ளது. பிரபல பாலிவுட் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது. இதன்மூலம் தென்னிந்தியாவிலிருந்து பாலிவுட் போகும் நடிகைகள் பட்டியலில் அனுபமாவும் இணைந்துள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்

சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் அனுபமா. தொடர்ந்து பட வாய்ப்புகளை கவரும் வகையில் சிறப்பான பல போட்டோஷுட்களை எடுத்து அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். மேலும் தன்னுடைய தினசரி நடவடிக்கைகளையும் பதிவிட்டு வருகிறார்.

கிருஷ்ணர் சிலைக்கு வண்ணம்

கிருஷ்ணர் சிலைக்கு வண்ணம்

ஓவியம் வரைவதிலும் சிறப்பான திறமையை கொண்டுள்ளார் அனுபமா. சில மாதங்களுக்கு முன்பு தான் வரைந்த ஓவியங்களை இவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். இந்த ஓவியங்கள் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தன. இந்நிலையில் தற்போது தன்னுடைய கைவண்ணத்தில் கிருஷ்ணர் சிலை ஒன்றை கலர்புல்லாக்கியுள்ளார் அனுபமா.

அழகான புகைப்படங்கள்

அழகான புகைப்படங்கள்

இதற்கான அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் மிகவும் ஆழமாக சிந்திப்பதாக காணப்படுகிறது. கருப்பு வெள்ளையில் துவங்கும் இந்தப் புகைப்படங்கள் கடைசியில் கிருஷ்ணரின் அழகான வண்ண சிலையுடன் ரசிகர்களை கவர்ந்துள்ளது. அந்த சிலையை மிகவும் அழகாக்கியுள்ளார் அனுபமா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X