நான் ஒருவரை காதலித்தேன்.. ஆனால் அது நீடிக்கவில்லை.. மனம் திறந்த தனுஷ் பட நடிகை!

சென்னை: பிரபல நடிகையான அனுபமா பரமேஸ்வரன், தனது காதல் தோல்வி குறித்து மனம் திறந்துள்ளார்.

மலையாளத்தில் வெளியான பிரேமம் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். தொடர்ந்து தெலுங்கு படத்திலும் நடித்தார்.

5 வயது சிறுவனின் அறுவைச் சிகிச்சைக்கு உதவி தேவை... உங்களால் ஒரு உயிர் காப்பாற்றப்படட்டும்..!

இதையடுத்து தனுஷ் நடிப்பில் வெளியான 'கொடி' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இதில் மாலதி என்ற கேரக்டரில் அவரது நடிப்பு பெரும் வரவேற்பு பெற்றது.

விரைவில் ரிலீஸ்

விரைவில் ரிலீஸ்

மலையாளம், தெலுங்கு என பிஸியாக இருந்து வருகிறார் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இந்நிலையில் 'தள்ளிப்போகாதே' படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார். இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

காதலித்து இருக்கிறீர்களா?

காதலித்து இருக்கிறீர்களா?

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை அனுபமா, ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர், நிஜ வாழ்க்கையில் நீங்கள் யாரையாவது காதலித்து இருக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பினார்.

காதல் நீடிக்கவில்லை

காதல் நீடிக்கவில்லை

அதற்கு பதில் அளித்து அனுபமா பரமேஸ்வரன் கூறும்போது, "நான் ஒருவரை காதலித்து இருக்கிறேன். ஆனால் அந்த காதல் ரொம்ப காலம் நீடிக்கவில்லை. அது தோல்வி அடைந்து விட்டது. இப்போது நான் யாரையும் காதலிக்கவில்லை" என கூறியுள்ளார்.

Recommended Video

Anupama Parameshwaran புகைப்படம் கொண்ட Mark List | Biharல் பரபரப்பு
பும்ராவுடன் டேட்டிங்

பும்ராவுடன் டேட்டிங்

ஏற்கனவே நடிகை அனுபமா பரமேஸ்வரன் கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ராவை காதலிப்பதாக தகவல் வெளியானது. மேலும் இருவரும் டேட்டிங்கில் இருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் அதனை அனுபமாவின் பெற்றோர் மறுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X