'யாரையுமே நம்ப முடியல..' பேஸ்புக்கில் வீடியோ வெளியிட்டு டிவி நடிகை தற்கொலை.. தொடரும் அதிர்ச்சி!

By

மும்பை: யாரையும் நம்ப முடியவில்லை என்று பேஸ்புக் லைவில் கூறிவிட்டு நடிகை ஒருவர் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த சில மாதங்களாக சினிமா மற்றும் சின்னத்திரை நடிகர், நடிகைகள் திடீரென தற்கொலை செய்துகொள்வது அதிகரித்து இருக்கிறது.

இது மற்ற நடிகர், நடிகைகளுக்கும் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

சுஷாந்த் சிங்

சுஷாந்த் சிங்

கடந்த ஜூன் மாதம் பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தனது வீட்டில் மின் விசிறியில் தூக்குமாட்டித் தற்கொலை செய்துகொண்டார். இது இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் ஏன் தற்கொலை செய்துகொண்டார் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த விசாரணை சிபிஐ வசம் சென்றிருக்கிறது.

பொருளாதார பிரச்னை

பொருளாதார பிரச்னை

அவரை அடுத்து இந்தி சின்னத்திரை நடிகர் மன்மீத் கிரேவல் தற்கொலை செய்தார். பொருளாதார பிரச்னைகளை சமாளிக்க முடியாமல் அவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்டது. பிறகு பிரேக்‌ஷா மேத்தா என்பவரும் திடீரென தற்கொலை செய்தார். அடுத்த சில நாட்களில் மராத்தி நடிகர் அசுதோஷ் பாக்ரே தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். அவரும் பொருளாதார பிரச்னை காரணமாகத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்டது.

நடிகர் சமீர் சர்மா

நடிகர் சமீர் சர்மா

பிரபல இந்தி சின்னத்திரை நடிகர் சமீர் சர்மா, மும்பையில் உள்ள தனது வீட்டில் நேற்று தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டது பாலிவுட்டில் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் மேலும் ஒரு நடிகை பேஸ்புக்கில் வீடியோ வெளியிட்டுவிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

நடிகை அனுபமா பதக்

நடிகை அனுபமா பதக்

பிரபல போஜ்புரி மற்றும் சின்னத்திரை நடிகை அனுபமா பதக். பீகார் மாநிலம் புர்னியாவை சேர்ந்த இவர், நடிப்புக்காக மும்பையில் தஹிசர் என்ற பகுதியில் வசித்து வருகிறார். இவர் கடந்த 1 ஆம் தேதி பேஸ்புக்கில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டார். பத்து நிமிடம் ஓடும் அந்த வீடியோவில் சிலர் அவரை ஏமாற்றி விட்டதாகவும் மெச்சூரிட்டியான பணத்தை விஸ்டம் புரொடக்‌ஷன்ஸ் என்ற நிறுவனம் திருப்பித் தரவில்லை என்றும் புகார் கூறியுள்ளார்.

நம்ப முடியவில்லை

நம்ப முடியவில்லை

சொந்த ஊரில் தனது டூவிலரை மனிஷ் ஷா என்பவர் மே மாதம் எடுத்து சென்றுவிட்டு திரும்ப தர மறுத்துவிட்டதாகவும் இங்கு யாரையுமே நம்ப முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். பின்னர் மறுநாள் அவர் தனது வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த தகவல் இப்போது தெரியவந்துள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X