Anushka - ப்ளீஸ் திருப்பி அனுப்பிடுங்க.. அலெக்ஸ் பாண்டியன் படத்தில் அனுஷ்காவுக்கு வந்த சிக்கல்?

சென்னை: Anushka (அனுஷ்கா) அலெக்ஸ் பாண்டியன் படத்தில் நடித்தபோது நடிகை அனுஷ்காவுக்கு ஒரு சிக்கல் எழுந்ததாக கூறப்படுகிறது.

தெலுங்கில் 2005ஆம் ஆண்டு சூப்பர் படத்தில் அறிமுகமான அனுஷ்கா அருந்ததி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். பேய் படமான அருந்ததியில் அனுஷ்காவின் நடிப்பு பட்டையை கிளப்பியது. அதுமட்டுமின்றி ஹீரோவுக்கு சமமான ரெஸ்பான்ஸும் கிடைத்தது. மேலும் அறிமுகமான சில வருடங்களிலேயே கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடித்ததன் மூலம் அவருக்கு பாராட்டும் கிடைத்தது.

Actress Anushka had a problem while acting in Alex Pandian film

பாகுபலி அனுஷ்கா: இதனையடுத்து தமிழ், தெலுங்கில் பல படங்களில் நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வர ஆரம்பித்தார். தமிழ், தெலுங்கில் தனித்தனி மேனேஜரை வைத்திருக்கும் அளவுக்கு பிஸியான நடிகையாக திகழ்ந்தார் அனுஷ்கா. தொடர்ந்து ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி படத்தில் நடித்தார். பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் இந்திய அளவில் ஹிட்டடித்தது. இதனையடுத்து மேற்கொண்டு பிரபலமான அனுஷ்கா ரசிகர்களால் தேவசேனா என்று அழைக்கப்பட்டார்.

குறைந்த வாய்ப்பு: ஃபுல் ஃபார்மில் இருந்த அனுஷ்கா ஆர்யாவுடன் இஞ்சி இடுப்பழகி படத்தில் நடித்தார். அந்தப் படத்துக்காக உடல் எடையையும் கூட்டினார். ரொம்பவே டெடிகேஷனாக அந்தப் படத்துக்கு உழைத்தாலும் படம் எதிர்பார்த்த ரிசல்ட்டை கொடுக்கவில்லை. அதுமட்டுமின்றி ஏற்றிய உடல் எடையை குறைக்க முடியாமலும் திணறினார். இதன் காரணமாக அவருக்கு பட வாய்ப்புகளும் குறைய ஆரம்பித்தன.

செகண்ட் இன்னிங்ஸ்: இந்த சூழலில் அனுஷ்கா தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியிருக்கிறார். அதன்படி மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி என்ற படத்தில் நடித்தார். படமானது கடந்த 7ஆம் தேதி வெளியானது. ஜவானோடு ரிலீஸானதால் படம் அடி வாங்கிவிடுமோ என்ற எண்ணம்தான் ரசிகர்களிடம் இருந்தது. ஆனால் ஃபீல் குட் படமாக அந்தப் படம் அமைந்திருக்கிறது. இதன் காரணமாக செகண்ட் இன்னிங்ஸ் ஆரம்பத்திலேயே அனுஷ்கா உற்சாகமாக இருக்கிறார்.

அலெக்ஸ் பாண்டியனில் சிக்கல்: இந்நிலையில் கார்த்தியுடன் தமிழில் அவர் அலெக்ஸ் பாண்டியன் படத்தில் இணைந்து நடித்தார். அப்போது அவருக்கு ஒரு சிக்கல் எழுந்ததாகவும் அதன் காரணமாக அரை மனதோடு அதில் நடித்ததாகவும் கூறப்படுகிறது. அதாவது அந்தப் படத்தில் தனக்கு மேக்கப் போடுவதற்காக தனியாக ஆட்களை அழைத்து வந்தாராம் அனுஷ்கா. ஆனால் அப்படி அழைத்து வரக்கூடாது என்று மேக்கப் யூனியனிலிருந்து எதிர்ப்பு கிளம்பியதாம்.

இதனையடுத்து அனுஷ்காவிடம் சென்ற கார்த்தி தயவு செய்து நீங்கள் அழைத்து வந்த ஆட்களை திருப்பி அனுப்பிவிடுங்கள். இல்லையென்றால் இங்கு பெரிய பிரச்னையே வெடிக்கும் என்றாராம். இதனால் அனுஷ்கா தான் அழைத்து வந்தவர்களை திருப்பி அனுப்பிவிட்டு தனக்கு தானே மேக்கப் போட்டுக்கொண்டார் என்று கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X