Anushka - வேட்டைக்காரன் செட்டில் விஜய் அப்படி செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை.. அனுஷ்கா ஓபன் டாக்

சென்னை: Anushka (அனுஷ்கா) வேட்டைக்காரன் செட்டில் விஜய் அப்படி நடந்துகொள்வார் என்று எதிர்பார்க்கவே இல்லை என நடிகை அனுஷ்கா தெரிவித்திருக்கிறார்.

கோலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடிகட்டி பறந்தவர் அனுஷ்கா. தெலுங்கில் முதலில் அறிமுகமாகி அங்கு தனது அழகாலும் திறமையாலும் ரசிகர்களை வசீகரித்தவர் ரெண்டு படத்தின் மூலம் கோலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்தார். அந்தப் படம் சரியாக போகாவிட்டாலும் அனுஷ்காவின் அழகு அனைவரையும் கவர்ந்தது. அதனையடுத்து தமிழில் தொடர்ந்து வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.

 Actress Anushka Open Talks about Vijay And His dance

தமிழில் விஜய்யுடன் வேட்டைக்காரன், சூர்யாவுடன் சிங்கம் சீரிஸ், அஜித்துடன் என்னை அறிந்தால், விக்ரமுடன் தெய்வ திருமகள், தாண்டவம், ரஜினியுடன் லிங்கா, கார்த்தியுடன் அலெக்ஸ் பாண்டியன், சிம்புவுடன் வானம் என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாகி தமிழின் டாப் நடிகைகளில் ஒருவராக மாறினார். இதனையடுத்து அனுஷ்கா ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி படத்தில் நடித்தார்.

அந்தப் படத்தின் முதல் பாகத்தில் பெரிதாக அனுஷ்காவுக்கு ஸ்கோர் செய்ய வாய்ப்பு இல்லையென்றாலும் இரண்டாவது பாகத்தில் அனுஷ்காவுக்கு பெரும் ஸ்பேஸ் கிடைத்தது. அதை பயன்படுத்திக்கொண்ட அவர் நடிப்பில் அசத்தினார். படமும் இந்திய அளவில் மிகப்பெரிய ஹிட்டானதால் அனுஷ்காவும் மிக பிரபலமானார்.

ஆர்யாவுடன்: தொடர்ந்து ஆர்யாவுடன் இஞ்சி இடுப்பழகி படத்தில் நடித்தார். அந்தப் படத்துக்காக உடல் எடையை ஏற்றினார். ஆனால் படமோ படுதோல்வியடைந்தது. அதேசமயம் படத்துக்காக ஏற்றிய உடல் எடையை அவரால் குறைக்க முடியவில்லை. எனவே அவருக்கான பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. இதனால் அனுஷ்காவின் அலை முடிவுக்கு வந்தது.

அனுஷ்கா பேட்டி: இந்நிலையில் வேட்டைக்காரன் படத்தில் நடித்தபோது ஏற்பட்ட அனுபவத்தை அவர் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார். பேட்டியில் பேசிய அவர், "வேட்டைக்காரன் படத்தில் என் உச்சி மண்டைல பாடல் ஷூட்டிங்கிற்காக செட்டுக்கு சென்றேன். அங்கு அமைதியாக உட்கார்ந்திருந்த விஜய் அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்தார். ஷாட் ரெடியானதும் கேமரா முன்பு இருவரும் இணைந்து நின்றோம்.

ஷாக் ஆகிவிட்டேன்: கேமரா ஆன் ஆனதும் விஜய்யின் நடனத்தை பார்த்து நான் ஷாக் ஆகிவிட்டேன். என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. ஒரே ஒருமுறை பார்த்துவிட்டு எப்படி அவரால் இப்படி ஆட முடிகிறது என்று யோசித்தேன். அவர் எப்படி அப்படி ஆடினார் என்று எனக்கு இன்றுவரை தெரியவில்லை" என்றார். அனுஷ்கா தனது இரண்டாவது இன்னிங்ஸை தற்போது ஆரம்பித்திருக்கிறார். அதன்படி அவர் நடித்திருக்கும் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படமானது செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X