குழந்தைக்கு பெயர் வச்சாச்சு.. முதல் முறையாக மகளுடன் குடும்பமாக அனுஷ்கா சர்மா விராட் கோஹ்லி தம்பதி!

சென்னை: தங்களின் குழந்தைக்கு வைத்துள்ள பெயரை நடிகை அனுஷ்கா ஷர்மா தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர்.

இதை தொடர்ந்து கடந்த 2017 டிசம்பர் 11-ம் தேதி இவர்கள் திருமணம் இத்தாலியில் விமரிசையாக நடைபெற்றது.

ஜனவரியில்..

ஜனவரியில்..

திருமணத்திற்கு பிறகும் அனுஷ்கா சர்மா திரைப்படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் அனுஷ்கா சர்மா லாக்டவுனில் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார். அவர்களின் முதல் குழந்தையை இந்த வருடம் ஜனவரியில் வரவேற்க உள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.

பெண் குழந்தை

பெண் குழந்தை

இந்நிலையில் தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக கடந்த 11 ஆம் தேதி விராட் கோலி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள், திரைத்துறை பிரபலங்கள், கிரிக்கெட் பிரபலங்கள் என பலரும் கோஹ்லி - அனுஷ்கா ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

முதல் முறையாக குழந்தையுடன்

முதல் முறையாக குழந்தையுடன்

இந்நிலையில் விராட் கோஹ்லியும் அனுஷ்கா சர்மாவும் தங்களின் குழந்தைக்கு பெயர் வைத்துள்ளதை சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளனர். மேலும் குழந்தையுடன் இருக்கும் போட்டோவையும் முதல் முறையாக வெளியிட்டுள்ளனர்.

 வாமிகா என்று பெயர்

வாமிகா என்று பெயர்

இதுதொடர்பாக அனுஷ்கா சர்மா ஷேர் செய்துள்ள இன்ஸ்டா பதிவில், தங்களின் மகளுக்கு வாமிகா என பெயரிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் தன் கையில் குழந்தையை வைத்திருக்க, தனது கணவர் விராட் கோஹ்லி சிரித்தப்படி குழந்தையை பார்க்கும் போட்டோவையும் ஷேர் செய்துள்ளார்.

குவியும் லைக்ஸ்

குவியும் லைக்ஸ்

அனுஷ்கா சர்மா ஷேர் செய்துள்ள இந்த போட்டோவை இதுவரை 27 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். அனுஷ்கா சர்மா மற்றும் விராட் கோஹ்லி ஆகியோர் தங்களின் குழந்தையுடன் இருக்கும் இந்த போட்டோவை பார்த்த பிரபலங்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X