Don't Miss!
- News
ரயிலில் பயணித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.. அபாய சங்கிலியை இழுத்து நிறுத்திய பெண்.. காரணம் என்ன?
- Sports
"ஆமா.. தோனி மாதிரி தான் செய்றேன்" ஹர்திக் பாண்ட்யா மீது எழுந்து வந்த குற்றச்சாட்டு.. தடாலடி பதில்!
- Automobiles
டாடா மாருதி ஆட்டம் எல்லாம் இனி குளோஸ்! க்விட் இவி வந்ததும் துண்டை காணும் துணிய காணும்னு ஓட போறாங்க!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
வயிற்றில் குழந்தையுடன்.. தலைக்கீழாக நிற்கும் கர்ப்பிணி அனுஷ்கா ஷர்மா.. தீயாய் பரவும் போட்டோ!
சென்னை: கர்ப்பிணியான நடிகை அனுஷ்கா ஷர்மா வயிற்றில் குழந்தையுடன் தலைக்கீழாக நிற்கும் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மாவும் கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும் கடந்த 2017ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
நடிகை அனுஷ்கா ஷர்மா தற்போது கர்ப்பமாக உள்ளார். தனது மனைவி கர்ப்பமாக உள்ளதை விராட் கோஹ்லி கடந்த 4 நான்கு மாதங்களுக்கு முன்பு சமூக வலைதள பக்கத்தில் அறிவித்தார்.
பேய்
அறைஞ்சமாதிரியே
இருக்கியேப்பா
பயில்வான்..
என்ன
விஷயம்..
பாலாஜியை
வச்சு
செய்யும்
நெட்டிசன்ஸ்!

பெரும் வைரல்
இன்ஸ்டாகிராமில் தனது மனைவியுடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்து, "இப்போது நாங்கள் மூன்று பேர். புது நபர் ஜனவரி 2021 ஆம் ஆண்டு வருவார்" என்று பதிவிட்டிருந்தார். அந்த போட்டோக்கள் இன்டெர்நெட்டில் பெரும் வைரலானது. அந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தனர்.

பேபி பம்ப் போட்டோ
அதனை தொடர்ந்து நடிகை அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய பேபி பம்ப் போட்டோவை ஷேர் செய்தார். பீச்சோரத்தில் நின்றப்படி தனது வயிற்றில் கையை வைத்து அனுஷ்கா ஷர்மா தனது தாய்மையை உணர்ந்து ரசித்த அந்த போட்டோவும் இணையத்தை திணறடித்தது.
தலைக்கீழாக நின்று
இந்நிலையில் அனுஷ்கா ஷர்மாவும் விராட் கோஹ்லியும் இணைந்திருக்கும் ஒரு போட்டோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. அதில் கர்ப்பிணியான அனுஷ்கா ஷர்மா தலைக்கீழாக நிற்கிறார். அவரது கால்களை மேல பிடித்தப்படி நிற்கிறார் அவரது கணவரான விராட் கோஹ்லி.

கடினமான ஒன்று
இந்த போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ள அனுஷ்கா ஷர்மா, அந்த போட்டோவுக்கு விளக்கத்தையும் பதிவு செய்துள்ளார். அதாவது, இந்த பயிற்சியானது ‘ஹேண்ட்ஸ்-டவுன்' (மற்றும் கால்கள் மேலே) மிகவும் கடினமான ஒன்றாகும். யோகா என் வாழ்க்கையின் ஒரு பெரிய பகுதியாக இருப்பதால், நான் கர்ப்பமாக இருப்பதற்கு முன்பு (ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்குப் பிறகு) நான் செய்து கொண்டிருந்த எல்லா ஆசனங்களையும், தேவையான சப்போர்ட்டுடன் செய்ய முடியும் என்று என் மருத்துவர் பரிந்துரைத்தார்.
Recommended Video

கணவர் சப்போர்ட்டில்
பல ஆண்டுகளாக நான் செய்து வரும் சிரசாசனாவைப் பொறுத்தவரை, நான் சுவரை சப்போர்ட்டிற்காக பயன்படுத்தினேன் என்பதையும், என் சமநிலையை ஆதரிக்கும் என் திறமையான கணவர் கூடுதல் பாதுகாப்பாக இருப்பதையும் உறுதிசெய்தேன். இந்த பயிற்சி என் யோகா ஆசிரியரின் மேற்பார்வையிலும் செய்யப்பட்டது. எனது கர்ப்பத்தின் மூலம் எனது பயிற்சியைத் தொடர முடிந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என பதிவிட்டுள்ளார்.