அப்ப ஷீர்டி... இப்ப சிவராத்திரி... சிறப்பு பூஜையில் அமைதியாகக் கலந்துகொண்ட நடிகை அனுஷ்கா
சென்னை: நடிகை அனுஷ்கா மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜையில் கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தமிழ், தெலுங்கில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருக்கிறார் அனுஷ்கா. இரண்டு மொழிகளிலும் மாறி மாறி நடித்துவருகிறார்.
ஹீரோவுக்கு இணையாக, படத்தைத் தாங்கி செல்லும் ஹீரோயின்களில் இவரும் ஒருவர். இவர் நடித்துள்ள நிசப்தம் படம் ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

தொடரும் கிசு கிசு
இவரும் பிரபல தெலுங்கு ஹீரோ பிரபாஸூம் காதலித்து வருவதாக கடந்த சில வருடங்களாக செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இருவரும் அதை மறுத்து வருகின்றனர். இருந்தாலும் அவர்கள் பற்றிய கிசு கிசு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. நடிகை அனுஷ்காவுக்கு இப்போது வயது 38.

கோயில்களுக்கு
இவர் கடந்த சில மாதங்களாக குடும்பத்துடன் கோயில்களுக்குச் சென்று வருகிறார். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றன. திருமணத்துக்காகத்தான் அவர் இப்படி கோயில் கோயிலாகச் செல்வதாகக் கூறப்பட்டது. அவருக்கு மாப்பிள்ளை பார்த்து விட்டதாகவும் கூறப்பட்டது. பின்னர் அதுபற்றி பேச்சு எழவில்லை.

கிரிக்கெட் வீரர்
கடந்த மாதம் கூட, அவர் ஷீர் சாய்பாபா கோயிலுக்குச் சென்ற புகைப்படங்கள் வெளியாயின. இந்நிலையில், அவர் கிரிக்கெட் வீரர் ஒருவரை காதலித்து வருவதாக செய்திகள் வந்தது. வட இந்திய கிரிக்கெட் வீரரான அவர், தென்னிந்திய அணி ஒன்றுக்காக ரஞ்சி போட்டிகளில் விளையாடி வருகிறார் என்று கூறப்படுகிறது.

மகா சிவராத்திரி
அவரைதான் கடந்த சில வருடங்களாக அனுஷ்கா காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இதை வழக்கம்போல அனுஷ்கா மறுத்திருந்தார். இந்நிலையில் மகாசிவராத்திரியை முன்னிட்டு அவர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்திய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். எந்த கோயிலில் இந்த வழிபாட்டை நடத்தினார் என்ற விவரங்கள் அந்தப் புகைப்படத்தில் இல்லை. இது வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











