இது என்ன புது கதையா இருக்கு.. அனுஷ்காவுக்கு வந்திருக்கும் அரிய வகை நோய்.. என்ன தெரியுமா?
சென்னை: பிரபல நடிகைகளுக்கு தொடர்ந்து அரிய வகை நோய் வரும் சூழலில் தனக்கும் ஒரு நோய் இருப்பதாக அனுஷ்கா கூறியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
யோகா டீச்சராக இருந்த அனுஷ்கா சூப்பர் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். 2005ஆம் ஆண்டு அறிமுகமான அனுஷ்கா தொடர்ந்து தெலுங்கில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். அவருக்கென்று ரசிகர் பட்டாளமும் உருவானது.

அருந்ததி மூலம் கவனம் ஈர்த்த அனுஷ்கா
பல படங்களில் நடித்தாலும் அவருக்கென்று ஒரு திருப்புமுனை வராமல் இருந்தது. அந்த சமயத்தில்தான் வெளிவந்தது அருந்ததி. அந்தப் படத்தில் அனுஷ்காவின் நடிப்பை பார்த்த பலரும் வெகுவாக பாராட்டினர். மேலும் நிச்சயம் இன்னும் பல வருடங்களுக்கு முன்னணியில் இருப்பார் எனவும் ரசிகர்கள் முதல் திரையுலகினர் வரை ஆரூடமும் கூறினர்.

தமிழில் அறிமுகமான அனுஷ்கா
தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த மாதவன் நடித்த இரண்டு படம் மூலம் என்ட்ரி ஆனார். இதனையடுத்து விஜய்யுடன் அவர் வேட்டைக்காரன் படத்தில் நடித்தார். அதன் பிறகு சூர்யாவுடன் சிங்கம் சீரிஸ், அஜித்துடன் என்னை அறிந்தால் விக்ரமுடன் தாண்டவம் என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியானார்.

பாகுபலி எனும் பிரமாண்டத்தில் அனுஷ்கா
தொடர்ந்து தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகையாக வலம் வந்த அனுஷ்கா ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி படத்தில் நடித்தார். அந்தப் படத்தின் முதல் பாகத்தில் பெரிதாக அனுஷ்காவுக்கு ஸ்கோப் இல்லையென்றாலும் இரண்டாவது பாகத்தில் அனுஷ்காவுக்கு பெரும் ஸ்பேஸ் கிடைத்தது. அதை பயன்படுத்திக்கொண்ட அவர் நடிப்பில் அசத்தினார். படமும் இந்திய அளவில் மிகப்பெரிய ஹிட்டானதால் அனுஷ்காவும் மிக பிரபலமானார்.

அனுஷ்காவின் செயலால் பறிபோன வாய்ப்புகள்
இதனையடுத்து ஆர்யாவுடன் இஞ்சி இடுப்பழகி படத்தில் நடித்தார். அந்தப் படத்துக்காக உடல் எடையை கூட்டிய அனுஷ்கா அதன் பிறகு அதனை குறைக்க முடியாமல் தடுமாறினார். இதனால் சினிமாவிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். இருப்பினும் அனுஷ்கா மீண்டும் எப்போது நடிக்க வருவார் என பலரும் எதிர்பார்த்திருக்கின்றனர்.

அனுஷ்காவுக்கு வந்திருக்கும் அரிய வகை நோய்
இந்நிலையில் அனுஷ்காவுக்கு அரிய வகை நோய் இருப்பதாக அவரே தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டி ஒன்றில் இதுகுறித்து பேசிய அவர், " எனக்கு அரிதான நோய் உள்ளது. சிரிக்க வேண்டிய சூழ்நிலை வந்து நான் சிரிக்க ஆரம்பித்தால் என்னால் அதை நிறுத்தவே முடியாது.
தொடர்ந்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை சிரித்துக்கொண்டே இருப்பேன். இதனால் பலமுறை படப்பிடிப்பை நிறுத்தும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது" என்றார். தனக்கு இருக்கும் அரிய வகை நோய் குறித்து அனுஷ்கா கூறியதை அடுத்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர்.
அனுஷ்கா தற்போது கடைசியாக நிசப்தம் என்ற படத்தில் நடித்திருந்தார். அவர் தற்போது புதிய படம் ஒன்றில் சமையல் கலைஞராக நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











