அருந்ததியா? தேவசேனாவா? புதிய அவதாரம் எடுக்கும் அனுஷ்கா ஷெட்டி.. காதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

சென்னை: மாதவன் நடித்த இரண்டு படத்தின் அழகு பதுமையாக வலம் வந்த நடிகை அனுஷ்கா செட்டி, முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினி, விஜய்,சூர்யா, விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்தார். திடீரென உடல் எடை கூடியதால் படவாய்ப்பை இழந்த அனுஷ்கா ஷெட்டி அட்டகாசமான கம்பேக் கொடுக்கும் வகையில், காதி படத்தில் மிரட்டலாக நடித்துள்ளார். அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

அருந்ததி, தேவசேனா என அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்து தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்த நடிகை அனுஷ்கா ஷெட்டி, இஞ்சி இடுப்பழகி திரைப்படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக குண்டான பெண்ணாக நடித்திருந்தார். அந்த படத்தில் குண்டாக இருக்கும் அனுஷ்காவிற்கு மாப்பிள்ளை கிடைக்காததால், திருமணம் ஆகாமல் கஷ்டப்படுவார். இந்த கதாபாத்திரத்திரம் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக அனுஷ்கா ஷெட்டி ஓவர் வெயிட் போட்டு நடித்திருந்தார். அந்த படத்திற்காக எபஃர்ட் போட்டு நடித்த போதும் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதன்பின் உடல் எடை குறையாததால் பல படவாய்ப்புகளை இழந்தார்.

anushka shetty ghaati first look

காதி: இதன் பின் கடந்த ஆண்டு அனுஷ்கா நடிப்பில், மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி என்ற படத்தில் நடித்தார். ஆனால், இந்த படம் ஃபீல் குட் படமாக இருந்த போதும் படம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை. இந்நிலையில் தற்போது அனுஷ்கா ஷெட்டி,மலையாளத்தில் ஜெயசூர்யா நடிப்பில் உருவாகி வரும் 'காதி' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் உருவாகி வருகிறது. இப்படம் மூலம் அனுஷ்கா ஷெட்டி மலையாளத்தில் அறிமுகமாக உள்ளார்.

பெரிய பட்ஜெட் படம்: இயக்குநர் கிரிஷ் இயக்கத்தில் காதி படத்தை ஃபர்ஸ்ட் பிரேம் என்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தில் ஒடிடி உரிமையை அமேசான் நிறுவனம் வாங்கியுள்ளது. பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தில் விக்ரம் பிரபு ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது.

மிரட்டலான பர்ஸ்ட் லுக்: இந்நிலையில், 'காதி' படக்குழு அனுஷ்கா ஷெட்டி 47வது பிறந்த நாளையொட்டி அவரின் மிரட்டலான பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் அனுஷ்கா கையில் சுருட்டை வைத்துக்கொண்டு புகைப்பிடித்தபடி இருக்க, அவரின் கண்களில் கண்ணீர் கலங்கி நிற்கிறது. தற்போது இந்த போட்டோ இணையத்தில் டிரெண்டாகி உள்ளது. மேலும், அனுஷ்காவின் பிறந்த நாளுக்கு திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் நண்பர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X