தோசையை திருப்பிப் போட்டதற்கே அலப்பறை செய்த பிரபல நடிகை
Recommended Video

திருவனந்தபுரம்: பிரபல நடிகை ஓய்வு நேரத்தில் படப்பிடிப்பு தளத்தில் சமையல் செய்துள்ளார்.
லால் ஜோஸ் இயக்கத்தில் ஃபஹத் ஃபாசில் நடித்த டைமண்ட் நெக்லஸ் படம் மூலம் நடிகையானவர் கேரளாவை சேர்ந்த அனுஸ்ரீ. மோகன்லாலின் ஒப்பம், அவர் மகன் பிரனவ் ஹீரோவாக அறிமுகமான ஆதி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் அனுஸ்ரீ.
தற்போது அவர் கையில் இரண்டு மலையாள படங்கள் உள்ளன.

விருதுகள்
2012ம் ஆண்டில் இருந்து படங்களில் நடித்து வருகிறார் அனுஸ்ரீ. சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக பல விருதுகளை பெற்றுள்ளார். டிவி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.
சமையல்
அனு தற்போது நடித்து வரும் படத்தின் செட்டில் ஓய்வு நேரத்தில் சமையல் கலைஞர்களுடன் சேர்ந்து படக்குழுவுக்கு சமையல் செய்துள்ளார். அவர் ஷூட்டிங்ஸ்பாட்டில் தோசை சுட்டுள்ளார். இல்லை இல்லை தோசையை திருப்பிப் போட்டுள்ளார்.

தோசை
ஷூட்டிங்ஸ்பாட்டில் டெக்னீஷியன்களுக்காக அனு தோசை சுட்டபோது எடுத்த புகைப்படங்களை அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அனுவின் இந்த குணம் படக்குழுவினருக்கு பிடித்துள்ளது.

விளம்பரம்
ஒரு தோசை சுட்டதை பெரிதாக புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு நல்லா விளம்பரம் தேடுகிறீர்கள் அனு என்று நெட்டிசன்ஸ் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











