டிரெட்மில்ல இப்படி ஒரு குலுக்கல் ஆட்டமா...வைரலாகும் நடிகையின் நடன வீடியோ
கொச்சி : மலையாள நடிகை அனுஸ்ரீக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லினுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களும், ரசிகர்களும் உள்ளனர். ஃபிட்னசில் அதிக ஆர்வம் கொண்ட அனுஸ்ரீ, அடிக்கடி தனது ஒர்க்அவுட் ஃபோட்டோக்களை வெளியிடுவது வழக்கம்.

அவ்வப்போது இவர் வெளியிடும் நடன வீடியோக்கள் வைரலாகி, லைக்குகளை அள்ளும். அந்த வகையில் லேட்டஸ்டாக டிரெட்மில்லில் ஒர்க்அவுட்டிற்கு இடையே குலுக்கல் நடனம் ஆடிய வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.இதற்கு முன் முன்னணி ஹீரோக்களான சுரேஷ் கோபி மற்றும் மம்முட்டியின் சிக்னேச்சர் ஸ்டெப்பை போட்டு அனுஸ்ரீ நடனமாடி இருந்தார். இந்த வீடியோவும் வைரலாகி, இணையத்தை அதிர வைத்தது.
டைமண்ட் நெக்லஸ் படத்தின் மூலம் நடிக்க வந்த அனுஸ்ரீ, முதல் படத்திலேயே மிகவும் பிரபலமானார். தொடர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்தார். கடைசியாக மஞ்சு வாரியர் நடித்த பிரதி பூவன்கோழி படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.


Click it and Unblock the Notifications











