கண்டாங்கி சேலையுடன் கனகாம்பர பூ... அழகில் அசத்தும் பொம்மி!

சூரரை போற்று மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து அதில் பொம்மி கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை அபர்ணா பாலமுரளிக்கு இப்போது தமிழில் பெரும் ரசிகர்கள் கூட்டம் உருவாகி உள்ளது.சென்னை : சூரரை போற்று மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து அதில் பொம்மி கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை அபர்ணா பாலமுரளிக்கு இப்போது தமிழில் பெரும் ரசிகர்கள் கூட்டம் உருவாகி உள்ளது.

இளம் இயக்குனர் ஆர்.கார்த்திக் இயக்கத்தில் அசோக் செல்வன் நடிக்கும் புதிய திரைப்படத்தின் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக அபர்ணா பாலமுரளி ஒப்பந்தமாகியுள்ளார்.

நடிகை, பாடகி என பல திறமைகளை கொண்டுள்ள அபர்ணா பாலமுரளி இப்பொழுது கண்டாங்கிச் சேலையுடன் கனகாம்பரப்பூ வைத்துக்கொண்டு அழகில் மெச்சும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

 சர்வதேச விருதுகளை

சர்வதேச விருதுகளை

இறுதிச்சுற்று வெற்றியை தொடர்ந்து இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து இருந்த சூரரைப்போற்று திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இந்திய அளவில் அனைவராலும் பாராட்டப்பட்ட இந்த திரைப்படம் சர்வதேச விருதுகளையும் குவித்து வருகிறது மேலும் ஆஸ்கார் கதவுகளையும் தட்டி உள்ளது. சூரரைப் போற்று படத்தில் சூர்யாவின் நடிப்புக்கு இணையாக அபர்ணா பாலமுரளியின் நடிப்பும் அதிக அளவில் பேசப்பட்டது

 பொம்மி கதாபாத்திரம்

பொம்மி கதாபாத்திரம்

மலையாளத்தில் அறிமுகமாகி தமிழில் 8 தோட்டாக்கள் மூலம் அறிமுகமான அபர்ணா பாலமுரளி அதைத்தொடர்ந்து சர்வம் தாளமயம் தீதும் நன்றும் உள்ளிட்ட படங்களில், நடித்து வந்தார். இந்த நிலையில் சூரரைப்போற்று திரைப்படம் இவரை புகழின் உச்சிக்கே கூட்டி சென்றுள்ளது. சூரரை போற்று படத்தில் இவரது பொம்மி கதாபாத்திரத்தை பார்த்த இளைஞர்கள் பொம்மி போன்று தங்களுக்கும் வாழ்க்கை துணைவி வேண்டும் என வேண்டி வருகின்றனர். அந்த அளவிற்கு பொம்மி கதாபாத்திரம் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

 மூன்று கதாநாயகிகள்

மூன்று கதாநாயகிகள்

தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் பிரபலமாக உள்ள அபர்ணா பாலமுரளி மலையாளத்தில் ஆடுஜீவிதம் என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் தமிழில் அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்கும் திரைப் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். துல்கர் சல்மான் நடித்துள்ள வான் படத்தை இயக்கிய இளம் இயக்குனர் ஆர். கார்த்திக் இந்த படத்தையும் இயக்க அசோக் செல்வனுக்கு ஜோடியாக மொத்தம் மூன்று கதாநாயகிகள் இதில் நடிக்கின்றனர்.

 கண்டாங்கி சேலையுடன் கனகாம்பர பூ

கண்டாங்கி சேலையுடன் கனகாம்பர பூ

நடிப்புக்கு மத்தியில் பல பாடல்களையும் பாடி வரும் அபர்ணா பாலமுரளி மலையாளத்தில் பல பாடல்களை பாடியுள்ளார். அடிக்கடி கவர்ச்சி இல்லாத போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் இவர் இப்போது கண்டாங்கி சேலையில் தலைநிறைய கனகாம்பரம் பூ வைத்துக் கொண்டு அழகில் மெச்சும் அளவிற்கு உள்ள புகைப்படங்கள் ரசிகர்களால் வர்ணிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X