Actress Aparna balamurali: விஜய்க்கு ஜோடியாகும் சூர்யா பட நாயகி.. அட அப்படியா!

சென்னை: நடிகர் விஜய் -வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வருகிறது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம். இந்தப் படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் செப்டம்பர் 5ம் தேதி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. படத்தின் டப்பிங் பணிகளில் 50 சதவீதத்தை நடிகர் விஜய் நிறைவு செய்துள்ளார்.

இதனிடையே அடுத்ததாக தளபதி 69 படம் குறித்த அறிவிப்பிற்காக ரசிகர்கள் வெயிட்டிங். விஜய் கேரியரில் இறுதிப் படமாக உருவாகவுள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக யார் நடிப்பார்கள் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளங்களில் ஆக்கிரமித்து வருகின்றன. விரைவில் இதற்கான பதில் தயாரிப்பு தரப்பிடமிருந்து வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

Actress Aparna Balamurali seems to join with Vijay in his Thalapathy 69 movie

நடிகர் விஜய்: நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் இணைந்து தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு அப்பா -மகன் என இருவேறு கெட்டப்புகள். இவர்களுக்கு சினேகா மற்றும் மீனாட்சி சவுத்ரி ஜோடியாக நடித்து வருகின்றனர். படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், லைலா உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்துள்ளனர். 90களில் காதல் நாயகனாக வலம்வந்த மோகன், இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக இணைத்துள்ளார். அவரது வில்லன் நடிப்பு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

GOAT படம்: மேலும் இந்தப் படத்தில் கேமியோ கேரக்டர்களிலேயே மறைந்த நடிகர் விஜயகாந்த், திரிஷா, சிவகார்த்திகேயன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். இது மட்டுமில்லாமல் வெங்கட் பிரபுவின் பிரேம்ஜி, வைபவ் உள்ளிட்ட கேங்கும் இந்த படத்தில் இணைந்துள்ளனர். இத்தனை நட்சத்திரங்களை வைத்து வேலை வாங்கியுள்ளார் வெங்கட் பிரபு. இதனால் இந்த படத்தின் கதைக்களம் குறித்து மிகப் பெரிய எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது. படம் சயின்ஸ் பிக்சன் படமாக டைம் ட்ராவலை மையமாக வைத்து உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி மாஸ் காட்டியுள்ளன.

தளபதி 69 படம்: இந்நிலையில் விஜய்யின் தளபதி 69 படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக யார் நடிப்பார்கள் என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வருகிறது. படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் மற்றும் சமந்தா இணையவுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து நடிகை பூஜா ஹெக்டே விஜய்யுடன் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தற்போதைய புதிய தகவலாக சூர்யாவுடன் சூரரைப் போற்று படத்தில் நடித்திருந்த நடிகை அபர்ணா பாலமுரளி விஜய்க்கு ஜோடியாக இந்த படத்தில் இணைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

விஜய்யுடன் ஜோடி சேரும் அபர்ணா பாலமுரளி?: படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில் அதனுடன் சேர்த்து மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்தும் ஹீரோயின் குறித்தும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். படத்தை இயக்குநர் ஹெச் வினோத் இயக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படம் அரசியல் கதைகளத்தை மையமாக வைத்து உருவாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. பல மாஸ் படங்களை கொடுத்துள்ள ஹெச் வினோத் விஜய்யின் இறுதிப்படத்தை இயக்கவுள்ள சூழலில் இந்த படமும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X